Friday, May 30, 2014

நியூ யார்க் பயணக் கட்டுரை - 4

மே 23 காலை நேரம் கழித்துதான் எழுந்தோம். எல்லா நாளும் அப்படி தான் இருந்தது. நடந்து நடந்நு அலுப்பாகி விடுகிறது. எவ்வளவு சிக்கரம் எழும்ப நினைத்தாலும் செய்ய முடியவில்லை. சரி, பழக்கமிருந்தால் தானே அதெல்லாம் நடக்கும். எப்படியோ எழுந்து விடுதியிலே காலை உணவு, அதற்கும் சேர்த்து தான் கட்டனம் வாங்குகிறார்கள். பெரும்பாலும் ரொட்டி, கேக்கள் தான், மற்றபடி சீரியல்ஸ், பால், பழரசம், முட்டை. முன்பொரு விடுதியில் பேன் கேக் மாவு இருக்கும் எடுத்து அகப்பையில் ஊற்றி சுட்டு கொள்ள வேண்டியது தான்.

சாப்பிட்டு கிளம்பி, ரயில் ஏறி நியூ யார்க் நுழைவதற்கு மதியம் 1 மணி ஆகிவிட்டது. ஆனால் என்ன, இது நியூ யார்க், தூங்க நகரம், என்னை போன்ற ஆட்களுக்கு ஏற்ற இடம். சில சுற்றுலா தளங்கள் இரவு 7, 8 மணி வரை கூட திறந்து இருக்கிறது. ம்யூசியம் மட்டும் தான் 5, 6 மணிக்கு மூடி விடுகிறார்கள். 

முதிலில் போக முடிவு செயுதிருந்தது, ம்யூசியம் ஆஃப் மாடர்ன் ஆர்ட்ஸ். அது 53வது வீதி அருகே இருந்தது அதற்கு முன்னால் நியூ யார்க் பாஸ் கவுன்டரில் சென்று ரசிது காட்டி பாஸை வாங்கி ஆக வேண்டும். அதை செய்துவிட்டு ம்யூசியத்திற்கு வந்தோம். மழை பெய்ய ஆரம்பித்திருந்தது. அருங்காட்சியகத்தில் நுழைந்தோம் அங்கேயே தோள் பையை வைத்து செல்வதற்கு ஒரு இடம் இருந்தது, வைத்து விட்டு முதல் தளத்தில் இருந்து துவங்கினோம். மொத்தம் 5 தளங்கள்.





முதல் தளத்தில் சிற்பங்கள். மாடர்ன் சிற்பங்கள். கற்களாலும், உலோகத்தாலும் செய்யபட்ட சிற்பங்கள். இரும்பால் செய்ய பட்ட ஒரு ரோஜா பூ.. என பல இருந்தன. அதை பார்த்து விட்டு மேல் தளத்திற்கு சென்றோம். மாடர்ன் ஓவியங்கள், சிலவற்றையே சிரமப்பட்டு ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடிந்தது, மற்றவை மூளைக்கு சிக்கவில்லை. முந்தய நூற்றண்டுகளில் ஓவியங்கள் இருப்பதை இருப்பது போல் பிரதி எடுப்பதற்காக தான் வரையப்பட்டது. ஆனால் கேமராவின் கண்டு பிடிப்புக்கு பின் அந்த ஒவியங்களின் தேவை இல்லாமல் ஆகிவிட்டது. அப்போது ஓவியங்கள் புதிய கலை வடிவம் பெற்று வந்தது. இருப்பதை இருப்பது போல் வரைய அவசியம் இல்லை, ஓவியங்களின் மூலம் இல்லாததை, கற்பனையில் தோன்றுவதை, கருத்து சொல்வதை என பல வகையான விஷயங்களுக்கு ஒவியம் ஊடகமாக அமைய தொடங்கியது. அதுவே நவீன ஓவியம்.


சிக்மர் போல்க்ன் ஒவியங்கள் பல அரைகளில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.கோத்தே, ஜாஸ்பர் ஜான்ஸ் போன்ற பலரின் ஓவியங்களும் அங்கு வைக்கப்பட்டிருந்தது. பல வகையான ஒவியங்கள், வண்ண கலவையிலான ஒவியங்கள், வண்ண புள்ளிகளாலேயே வரையப்பட்ட ஓவியங்கள், ஒரே இடத்தை, ஒரே கோனத்தில் வெவ்வெறு வண்ணங்களில் வரைந்த சில ஒவியங்கள் இருந்தது. அவை கூட்டாக பார்த்து பொருள் கொள்ள வேண்டியது போலிருக்கிறது. ஆங்காங்கே தொலைகாட்சிகளில் சில வீடியோக்கள் ஓடி கொன்டு இருந்தது, ஒன்று கூட என்ன சொல்ல வருகிறது என்று புரிந்து கொள்ள முடியவில்லை. 

பல வருடங்களாய் வளர்ந்து வந்த மின் ஒளி தொழில் நுட்ப வளர்ச்சியை காட்சிக்கு வைத்திருந்தார்கள். புகைபட கேளரி ஒன்று இருந்தது. சர் ரியலிஸ்டிக் ஓவியங்கள். இன்னும் பல வகையான ஓவியங்கள் மற்றும் கலை பொருட்களால் நிறைந்து இருந்தது. கட்டயமாக இதை  எல்லாம் புரிந்து கொள்ள ஒரு பயிற்சி தேவை. ஒரு பாமர தனமாக இந்த அருங்காட்சியகத்தை ரசித்து விட்டு வந்தேன் என்று தான் சொல்ல வேண்டும்.


கால் வலிக்க ஆரம்பித்து விட்டது. ஒவ்வொரு அருங்காட்சியகமும் பெரிது பெரிதாக இருந்தது. ஆங்காங்கே உட்கார்ந்து உட்கார்ந்து தான் எல்லாவற்றையும் சுற்றி பார்த்தோம். அங்கிருந்து வெளி வந்த போதும் மழை பெய்து கொன்டு இருந்தது. குடை பிடித்து கொன்டு மெதுவாக நடந்து போனோம். ஆன்கள் இங்கு பெரும்பாலும் நீள கம்பி குடை தான் வைத்திருந்தார்கள்.

ராக்பெல்லர் சென்டரில் இருக்கும் ஜீ ஈ பில்டுங்கின் மேல் பார்வை மேடை (Observatory deck) இருந்தது. இதை "Top of the Rock" என்று அழைக்கிறார்கள். இதே கட்டிடத்தில் தான் NBC TVயின் ஸ்டுடியோ உள்ளது. அவ்வளவு பெரிய கட்டிடமாக இருந்தாலும் பல கட்டிமங்களுக்கு நடுவே அதை தேடி கண்டு பிடிக்க மிகவும் சுத்த வைத்துவிட்டது. 67வது மாடிக்கு லிப்டில் சென்றோம். 70 மாடிகள் கொன்ட கட்டிடம் இது. ஆனல் இதை விட பல உயரமான கட்டிடங்கள் நியூ யார்க்கில் இருக்கிறது.  67, 68, 69 மாடி மூன்றிலும் சென்று பார்பதற்கு அனுமதிக்கிறார்கள். அந்த உயரத்தில் இருந்து நகரின் பெரும் பகுதி தெரிகிறது, அதற்கு அப்பால் மேகம் மறைத்துவிடுகிறது. பல புகை படங்கள் எடுத்து கொன்டோம். எல்லோரும் அதை தான் செய்து கொன்டுருந்தார்கள். இடம் தெரிந்தவர்கள் கட்டிடங்களை சுட்டி பெயர் குறிப்பிட்டு கொன்டிருந்தனர். 

அங்கிருந்து வெளி வந்ததும். ஷாலினிக்கு பசி தாங்க முடியவில்லை. சுற்றி பார்த்து கொன்டே இருந்தத்தில் மதியம் சாப்பிட மறந்துவிட்டோம். உணவகம் தேடி அலைந்தோம், சிப்பாட்லே கண்னில் தட்டுப்பட்டது. ப்ராட் வேயில் நடந்து மேடம் டுஸார்ட் சென்றோம். மெழுகு பொம்மைகளாள் ஆன காட்சியகம். பிரபல ஹாலிவுட் நடிகர்கள், அரசியல் தலைவர்கள், அமேரிக்க ஜனாதிபதிகள், விளையாட்டு வீரர்கள், இசை கலைஞர்கள என பல பேரின் உருவங்கள் மெழுகு பொம்மையாக செய்து வைக்கப்பட்டுருந்தது. நம் நாட்டு அமிதாப் பச்சனும், ஷாருக்கானும் கூட இருந்தார்கள். லிபர்டி ஸ்டாட்சிவின் முகம், கோரில்ல உருவமும் இருந்த்து. சில சிலைகள் தத்ருபமாக இருந்தது. எல்லாரும் இஷ்டத்திற்கு புகைபடம் எடுத்து கொன்டனர். ஆண்கள் நடிகைகளை கட்டி பிடித்தவாறு புகைபடம் எடுத்து கொன்டனர். பெரும் தலைவர்களுக்கு அருகில் குறும்பு தனமாய் ஷேஷ்டை செய்து சிலர் படம் எடுத்து கொன்டனர். நான் ஜாக்கி சானுடனும், மைக்கல் ஜாக்ஸன் உட்பட பலருடன் புகைபடம் எடுத்த் கொன்டேன். கேட்டி பெர்ரியுடனும். ஷாலினி தன் அபிமான ஷாருக்கானுடன் எடுத்து கொன்டாள்.



மேடம் டுஸார்ட் உலகில் பல இடங்களில் உள்ளது. அவர்களின் இனைய தளத்தில் அனைத்து கிளைகளில் இருக்கும் பொம்மைகளின் புகை படங்கள் சில வற்றை போட்டிருந்தார்கள். அதனால் பல எதிர்பார்ப்புடன் சென்றோம். ஆனால் நியூ யார்க்கில் இருந்த்தில் நாங்கள் எதிர் பார்த்தது சிலவை இல்லை. அது ஏமாற்றம் அளித்தது. ஹ்ரித்திக் ரோஷனிடம் புகைபடம் எடுக்க நினைத்த ஷாலினிக்கோ பலத்த ஏமாற்றம். சிறிது நேரம் கழித்து நியூ யார்க்கிலேயே சாப்பிட்டு விட்டு விடுதிக்கு திரும்பினோம்.

No comments:

Post a Comment