Monday, May 19, 2014

இணையத்தில் இருந்து புத்தகத்திற்கு பின்னகர்வு

சமிப காலமாய் புத்தக வாசிப்பு என்னிடத்தில் அதிகமாகி வருகிறது. அதை தொடர்ந்து டிவி, இணையம், மற்றும் இதர பொழுதுபோக்கு அம்சங்கள் மிக குறைந்துவிட்டன. ஒரு நாளைக்கு பேஸ்புக்கில் சராசரியாக மூன்று நிமிடத்திற்கு மேல் செலவழிப்பதில்லை. இது என் வாழ்வில் பெரிய திருப்பம், ஒரு போதையில் இருந்து வெளிவந்தாற் போல் உள்ளது. சாப்பிடும் போது மட்டும் டிவி ஓடும், ஆனால் சில சமயம் விரு விருப்பான் கதை நகர்வில் சிக்கி கொன்டு நேரம் கழிவதை தவிர்க்க முடியவில்லை. ஆனால் இணையத்தை குறைவாக உபயோகிப்பது ஒரு விடுதலை உனர்வை அளிக்கிறது.

நூலகம் என்று ஒரு கட்டிடம் எல்லா ஊர்களிளுமே இருக்குமென்றே நினைக்கிறேன்.  எந்த ஊருக்கு போனாலும் அந்த கட்டிடத்தினுள் பேருக்காவது ஒரு முறையேனும் காலேடுத்து வைக்கும் நிலை அமைந்துவிடும். ஆனால் இப்போது நூலகங்களை பெரும் அளவில் உபயோகித்து வருகிறேன். அதுவும் இந்த அமேரிக்க நூலகங்கள் பெரும் அளவில் புத்தகங்களை வைத்திருக்கின்றன, தமிழ் புத்தகங்களும் ஏராளமாக உள்ளது. அனைத்து புத்தகங்களையும் நூலகங்களின் இணைய தளத்தின் மூலம் தேட, இரவல் கேட்க, இரவல் நீட்டிக்க முடிகிறது. அதைவிட மேலாக பிற நூலகங்களில் இருந்து இரவல் வாங்கும் முறை. நான் இருக்கும் மாகானமான மிஷிகன் மாகானத்தில் இருக்கும் அனைத்து நூலகங்களும் கூட்டு சேர்ந்து எந்த நூலகத்தில் இருந்தும் இரவல் வாங்கலாம் என்றும் அதற்காக அருமையான இணைய தளம் ஒன்றையும் நிறுவி இருக்கிறது.

இணையத்தில் வாசிப்பதற்கும், புத்தகத்தில் வாசிப்பதற்கும் நிறையவே வித்தியாசம் தெரிகிறது. இணையத்தில் நாம் எளிதாக தேட முடிகிறது, ஆனால் அப்படி தேடும் போது நமக்கு கிடைப்பது தேடலுக்கு உன்டான கட்டளை முறையாலே(algorithms) தீர்மானிக்க படுகிறது. எப்படி அது தீர்மானிக்கிறது என்பதை பற்றிய ஆழந்த புரிதல் எனக்கு கிடையாது. ஆனாலும் அதனை தினமும் உபயோகிப்பவன் என்பதனால் அதை ஊகிக்க முடியும். நாம் தேடுவதற்கான இணையத்தில் இடும் சொற்களை வைத்தே நமக்கு தேடல் முடிவுகளை தருகிறது. இது தேடுவதற்கு ஒரு எளிய வழி தான், ஆனால் எந்த விதமான தேடலுக்கு? சென்னையில் டிவிஎஸ் டீலர் யார் என்று தெரிந்து கொள்ள இணையம் பெரும் உதவி புரியலாம், ஆனால் அத்வைதத்தை அறிந்து கொள்ள நினைக்கும் ஒருவர் போக வேன்டிய இடம் இணையம் அல்ல புத்தகம்.
புத்தகத்தில் எழுதப்படுவது அறிஞர்களாள், நிபுனர்களாள் எழுதப்படுகிறது அன்றி இணையத்தில் இருக்கும் கத்து குட்டிகளால், பக்கத்து வீட்டு மாமாக்களால் அல்ல. புத்தகத்தில் ஒரு முறை எழுதப்பட்டு பல முறை படித்து பார்த்து சரி செய்யப்பட்டு நமக்கு கிடைக்கிறது.  இணையத்தில் பெரும்பாலும் ஒருவரால் அந்த சமயத்தில் உடனுக்கு உடனே எழுதப்பட்டு வெளியிடப்படுகிறது. புத்தகத்தில் ஒரு விஷயத்தை நாம் விரைவாக கத்துகொள்ள முடியாது படி படியாக அதை சார்ந்த அனைத்து விஷயங்களையும் கற்று கொன்டே நாம் தேடும் விஷயத்தை தெரிந்து கொளவோம். அது நல்லது, நாம் தேடும் விஷயத்துக்கு மேலும், அதன் சம்பத்தபட்ட விஷயங்களையும் தெரிந்து கொள்கிறோம். இணையம் நமக்கு தேடும் விஷயத்தை மட்டும் எடுத்து தருகிறது அப்படி எடுத்து தரும் ஒரு கட்டுரையில் கூட நாம் ஒரு நாலு வரியை படித்து விட்டு அந்த விஷயத்தை அரை குறையாக தெரிந்து கொள்ளுகிறோம்.

புத்தகத்தில் நாம் படிக்கும் போது அதில் எனக்கு தேவையான விஷயங்களையே கையில ஏந்தி படிக்குறேன். ஆனால் இணையத்தில் நான் ஒரு விஷயத்தை படிக்கிறேன் என்றால், எனக்கு தேவையான விஷயம் அங்கு பத்து வரி தான் இருக்கிறது என்றால், அதை சுற்றி பத்து வகையான விளம்பரங்கள் இருக்கும். நான் எனக்கு வேண்டிய விஷயத்தை தரவிரக்கம் செய்யும் போது அந்த விளம்பரங்களையும் சேர்த்தே தரவிறக்கம் செய்கின்றேன். எனது தரவு ஒரு வினாடியில் தரவிறங்கும் என்றால், அந்த விளம்பரங்களுடன் சேர்ந்து தரவிரக்கம் செய்யும் போது அது பத்து விநாடியாக மாறுகிறது. அதே போல் எனது தரவு 50 Kilo bytes என்றால் அந்த விளம்பரத்துடன் சேர்ந்து அது 2 Mega bytes க்கு மேலே போக கூடும்.  இது தேவையில்லாத ஒரு பளு அதை புத்தகத்தின் மூலம் எளிதாக தவிர்த்து விடலாம். இங்கே விளம்பரத்தையே ஆதயமாக கொன்டு செயல்படும் கேளிக்கை பத்திரிக்கைளை பற்றி நான் பேசவில்லை. அதே போல் இணையத்தில் விளம்பரம் இல்லாமல் எல்லாம் கிடைக்க வேண்டும் என்றும் சொல்லவில்லை. அது வியாபரம். ஆனால் இலவசம் என்ற பெயரில் இந்த விளம்பரங்கள் நம் தலையிலை ஏற்ற படுவது தான் பிரச்சனை. இந்த இணையம் என்ற ஊடகம் வந்த பின் புத்தகம் என்ற ஊடகம் பழமையாகி விட்டது. ஒவ்வொரு மனிதனும் இணையத்தையே நாடும் எண்ணம் மேலோங்கி உள்ளது.அந்த மாற்றதிற்கு நாம் குடுக்கும் விலை இந்த விளம்பரங்கள் அள்ளி அள்ளி நமக்கு அளிக்கப்படுவது.

இந்த விளம்பரங்கள் அனைத்தும் 'பல் உருக்களினால்' (Hypertext) ஆக்கப்பட்டது. ஆகவே இவ்விளம்பரங்கள் பெரும்பாலும் நாம் படிக்க சென்ற விஷயத்தில் இருந்து திசை திருப்பி விடுகிறது. விளம்பரம் மட்டும் அல்ல, படிக்கும் விஷயங்களிலேயே அதில் இருக்கும் தொடர்புகளும், பக்கவாட்டில் தெரியும் பிற விஷயங்களும் நம்மை எளிதாக திசை திருப்பிவிடுகின்றன. நாம் படிக்க சென்ற விஷயத்தை பத்து நிமிடத்தில் படித்து முடிப்போம் என்றால் இந்த திசை திருப்பிகளால் நாம் மேலும் பல நிமிடங்கள் இணையத்தில் செலவிட நேர்கிறது. புத்தகத்தில் இந்த திசை திருப்பம் நடப்பதற்கு மிக குறைவாகவே சாத்தியங்கள் உண்டு. அதிக பட்சம் ஒரு சில வார்தைதைகளுக்கு அர்த்தம் பார்ப்போம். ஆனால் புத்தகத்தில் படிக்கும் விஷயங்களை உடனுக்குடன் கூகுல் செய்து பார்த்து கொன்டிருந்தால் கதை வேறு.

மேலும் நாம் புத்தகத்தை அனுகி அறிவை வளர்த்து கொள்வதால் நாம் என்ன தேடுகிறோம் என்று எவருக்கும் தெரிய போவதில்லை ஆனால் இணையத்தில் நாம் தேடும் ஒவ்வோரு விஷயமும் பதிவு செய்யப்படுகிறது. அதை கொன்டு நாம் யார் நமக்கு என்ன தேவை என்று நமக்கு விளம்பரம் தர உபயோகிக்கப்படுகிறது. இதன் மூலம் மக்களிடம் எளிதாக நுகர்வை தூன்டி விட முடிகிறது. எளிதாகவும் விரைவாகவுமான தேவைக்கு இணையம் கை கொடுக்கும். ஆனால் அப்படி ஒரு அவசரம் இல்லையெனில், புத்தகத்தை அனுகலாம். உதாரனம், இப்போது ஒரு புது ஊருக்கு சுற்றுலா போகபோகிறோம் என்றால், அதற்கு எப்படியும் ஒரு பத்து, இருபது நாட்களுக்கு முன்னே அதற்கான ஏற்பாடுகளை தொடங்கி விடுவோம். அந்த சமயத்தில் அந்த ஊரையும், அங்கு சுற்றி பார்க்க வேண்டிய இடங்களையும் இணையத்தில் தேடுவதற்கு பதிலாக, அந்த ஊரை பற்றிய ஒரு நல்ல புத்தகத்தை நூலகத்தில் எடுத்து படிப்பது ஒரு ஆழமான புரிதலை அடைய மிகவும் உதவும்.


இதெல்லாம் போக ஒவ்வருத்தருக்கும் பல தனிபட்ட வசதிகளையும் புத்தகங்கள் தரலாம். கண் எரிச்சலை தவிர்கலாம், குறிப்பாக கம்ப்யூட்டரிலேயே நாள் முழுதும் வேலை பார்பவர்களுக்கு. நடந்து கொன்டெ வாசிப்பவர்கள், மரத்தில் ஏறி வாசிப்பவர்கள் (வாய்ப்பிருந்தால் நான் செய்ய தயங்க மாட்டேன்), தனிமையாக பூங்காவில் வாசிப்பவர்கள், கழிப்பரையில் அறிவு வளர்போருக்கு என பல சாத்தியங்கள். நவின கைபேசிகளும், மின் பலகைகளும்(tablet) இதை ஒரளவுக்கு தர முடியும் ஆனால் அதற்கு மின்னூட்டமிட்டு தயாராக இருக்க வேண்டும். ஆனால் நமக்கு வேண்டும் சமயத்தில்தான் அவை அனைந்து போகும். எதில் தொடர்ந்து படித்தாலும் கழுத்தி வலி உன்டாவதை தவிர்க்க முடியவில்லை. ஆனாலும் அறிதலில் வரும் வலி பெரும் பொருட்டல்ல.

1 comment:

  1. it is well said that reading books habit is downsizing nowadays.only the people who experiences the pleasure of reading only understand how nice it is. as it is said that the books are writen with the full knowledge of its author after long thoughts and lot of stress.but it comes in your hand as a book to read.therefore you are gaining one persons full affords by means of book by spending little time.

    ReplyDelete