Wednesday, May 28, 2014

நியூ யார்க் பயணக் கட்டுரை - 2

அமெரிக்க நகரங்களை சுற்றி பார்ப்பதற்கு, அங்குள்ள சுற்றுலா தளங்களுக்கு செல்வதற்கு முன்னதாகவே மொத்தமாக அனுமதி சீட்டை சில தனியார் நிறுவனங்கள் தந்து விடுகின்றன. சிட்டி பாஸ், நியு யார்க் பாஸ் போன்றவை. அந்த சுற்றுலா தளங்களில் தனி தனியாக வாங்கும் அனுமதி சீட்டை விட மொத்தமாக வாங்குவதால் இதில் விலை குறைவாக கிடைத்துவிடுகிறது. ஆனால் ஒவ்வொரு அனுமதி சீட்டும் உபயேகிக்க ஆரம்பத்தித்தில் இருந்து 3 அல்லது 5 நாட்களுக்குள் காலாவதி ஆகிவிடும். அதனால் நாங்கள் முதல் நாள் சென்று சேர்ந்த போதே 2 மணிக்கு மேலே ஆகிவிட்டதால், அந்த நியு யார்க் பாஸை அடுத்த நாளில் இருந்து உபயோகிக்க தொடங்கலாம் என்றும் அதனால் இன்று நியு யார்க் நகரில் சுற்றி திரியலாம் என்றும் முடிவு செய்தோம்.

இறங்கி சிறிது நேரத்திலேயே ஷாலினிக்கு பசி. இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை ஏதாவது சிறிதளவு சாப்பிடாக வேண்டும். அதனால் ஒரு உணவகத்தை தேடி அலைந்தோம். இடம் தெரியாத இடத்தில் ஒரு உணவகத்தை தேடுவது நேரத்தை அதிகம் எடுத்து கொள்கிறது. அதுவும் அங்கு சைவ உணவு கிடைக்க வேண்டும்.

சாலைகளில் அகல நடைபாதை இருந்த்து ஆனாலும் ஜனங்களின் தெரிசல். இந்திய நகரங்களில் இருப்பது போல் இருந்தது. அதிக மக்கள் இல்லாத மற்ற அமெரிக்க ஊர்களில் இருந்து வந்து இத்தனை மக்கள் நிறைந்து கலை கட்டிய இந்த வீதிகளை பார்ப்பது புத்துனர்வு தருவதாக இருந்தது. சாலைகளிலும் கார்களின் நெரிசல். இதனாலேயே நான் காரை ஊருக்கு வெளியே நிறுத்திவிட்டு வருவது என்று முடிவு எடுத்தேன். தனி நபர் கார்களை விட மஞ்சள் நிற டாக்ஸிகள் தான் அதிகம். ஹாரன் ஒலி கேட்டு கொன்டே இருத்தது. சாலையும், நடைபாதையும் தூசி நிரம்பி அழுக்காக இருந்தது. எங்கும் உயர்ந்த கட்டடங்கள் சாலையை அடைத்து கொன்டு இருந்தது. பழைய கற்களினாலான, வண்ணம் பூசபடாத கட்டிடங்கள். ஷிகாகோ நகரம் இப்படி இருக்கவில்லை. அங்கும் உயர்ந்த கட்டிடங்கள் இருந்தது, ஆனால் இவ்வளவு அதிகமான கட்டிடம் இல்லை. அங்கு சாலையும் நடைபாதையும் இன்னும் விசாலமாக இருந்தது, சுத்தமாக இருந்தது. ஆனால் இது அதை விட பெரிய நகரம் என்பதால் இந்ந நெரிசல் புரிந்து கொள்ள கூடியதே. 


இங்கு தான் சாலையில் பெட்டி கடைகளை பார்க்க முடிந்தது. ஆங்காங்கே தெரு மூலைகளில் ஹலால் செய்யபட்ட அரபு உணவு விற்கப்பட்டது. ஆனால் அந்நகரில் அத்தனை முஸ்லிம்களை பார்க்கவில்லை. அந்த கடைகளின் தரத்தை பார்த்தால் அங்கு வாழும் நடு வர்கத்திற்கும் கீழ் உள்ள மக்கள் வாங்கி சாப்பிடும் கடை போல் தெரிந்தது. ஆங்காங்கே புகை பொருள், பத்திரிகை, தின்பண்டம் விற்கும் கடை. அதை இங்கு நியூஸ் ஸ்டான்ட் என்று சொல்கிறார்கள். அந்த கடைகளில் எல்லாம் இந்திய துனை கண்டத்தை சேர்ந்த முகங்கள் தான் கடைகார்ர்களாய் காணபட்டனர். பிறகு ஆங்காங்கே கருப்பர்கள் பைகளையும், கொடைகளையும் குவித்து வைத்து கூவி கூவி விற்று கொன்டு இருந்தார்கள்.

எப்படியோ ஒரு உணவு விடுதியை தேடி கண்டு பிடித்தோம். அங்கு நான் ஒரு வெஜ்ஜி பீட்ஸா துன்டை சாப்பிட்டேன். ஷாலினி மொட்ஸரெல்லா பனினி வாங்கி கொன்டாள். வாயில் வைக்க விளங்காத ஒரு சாப்பாடு அது. சீஸில் ஏதோ ஒரு வாடை, அதில் சவித்து போட்டது போல் ஸ்பினச் பச்சையாக இருந்தது. சரி வந்த இடத்தில் ருசிக்கு முக்கியத்துவம் இல்லை, காட்சிக்கு தான் என்று சாப்பிட்டு அந்த உணவகத்தில் சிறுநீர் கழித்துவிட்டு கிளம்பினோம். இந்த சுற்றுலா செல்லும் போதெல்லாம் அதிகம் தொல்லை தந்து நேரத்தை வீனடிப்பது இந்த சிறுநீர் பிரச்சனை தான். அதனால் கிளம்பும் போதே அளந்து தண்ணிர் குடிப்பது, கிடைத்த சமயத்தை பயன்படுத்தி கொள்வதென்று முடிவு எடுத்தேன். அது பயன் தந்தது.

உணவகத்திற்கு அருகிலேயே டைம் ஸ்க்யர் இருந்தது. ஷாலினி தான் வழி நடத்தி கூட்டி சென்றாள். சுற்றுலா தளங்களும், அதற்கு வழி பார்த்து வைக்கும் பொறுப்பும் அவளது. உயரமான கட்டங்களை அன்னாந்து பார்த்து கொன்டும் புகைபடம் எடுத்து கொன்டும் நடந்தோம். நாங்கள் அப்படி பார்த்து கொன்டு நடப்பதே வெளியூர்காரர்கள் என்று காட்டி கொடுத்துவிடும். ஆனால் அங்கு உள்ளுர்காரர்கள் குறைவாக தான் தென்பட்டார்கள். நிறைய சுற்றுலா பயணிகள் தான் இருந்நது போல் தோன்றியது.

டைம் ஸ்க்யர் உயரமான கட்டடங்களுக்கு நடுவே இருக்கும் ஓர் சதுக்கம். அந்த சதுக்கத்தை சுற்றி கட்டிடங்களின் வெளி சுவரில் மாபெரும் விளம்பர பலகைகளில் விளம்பர படங்கள் ஓடி கொன்டு இருந்தது. ஒளி வெள்ளமாக நிரைந்நிருந்த்து. ஏராளமான சுற்றுலா பயனிகள் நிரம்பி இருந்தார்கள். எல்லாரும் பல் வேறு விதமாய் ஃபோட்டோ எடுத்து கொன்டு இருந்தனர். முழுக்க முழுக்க மணிதனால் உருவாக்கபட்ட செயற்கை அழகு.
டிஜிட்டல் யுகத்தின் ஒரு சாதனை சின்னம் போல் இருந்தது அந்த இடம். நாள் தோறும் விளம்பரங்களை கண்டு சலித்து போயிருக்கும் மக்களை விளம்பரங்களை கொன்டே கவர்வது ஒரி விந்தை தான். துனி விளம்பரங்கள், திரைபட, சின்னத்திரை முன்னோட்டங்கள், குளிர் பானம், மின்னனு சாதனம், நகரில் ஓடும் மேடை நிகழ்வுகள் என்று பலவற்றிற்கும் விளம்பரம் ஓடி கொன்டு இருந்தது. அதில் பெண் கவர்ச்சி, அரை நிர்வான விளம்பரங்களும் பூதாகார அளவில் ஓடி கொன்டு இருந்தது.டைம் ஸ்க்யர் நியூ இயர் பால் ட்ராப் மிகவும் பிரசித்தி பெற்றது. அந்த சமயத்தில் இந்த சதுக்கத்தில் இடம் கூட கிடைக்காமல் போய்விடும். எந்நேரமும் அங்கு கூட்டம் இருந்து கொன்டு இருந்தது.

டைம் ஸ்க்யர்

எல்லா நாட்டு மக்களும் அங்கு இருந்தார்கள். அதில் இந்தியர்களும் அதிகமாக இருந்தார்கள். எல்லா மக்களும் கண் வழியே சுற்றி பார்பதை மறந்து விட்டிருந்தார்கள். கேமரா திரையில் தான் பார்த்து கொன்டிருந்தார்கள். சீனர்கள் புகைபடம் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் கொன்டு இருந்தனர். அதுவும் சீன பெண்கள் வித விதமான கை முத்திரையுடன், முக பாவனையுடனும் புகைபடம் எடுத்து கொன்டனர். இந்தியர்களும் சலைக்காமல் எடுத்தார்கள். இதற்கெல்லாம் கேமராவும், நினைவில் நிறுத்தி கொள்வது மட்டும் காரனமல்ல. ஃபேஸ்புக் - அதற்கு தான் இத்தனை ஆர்பாட்டமும். வெள்ளையர்கள் ஒன்றிரண்டு போட்டகளுடன் நிறுத்தி கொன்டார்கள்.

அங்கு பார்வையாளர்கள் அமர்வதற்கு ஒரு கேளரி அமைத்திருக்கிறார்கள். அந்த படிகளில் அமர்ந்து வேடிக்கை பார்த்து கொன்டிருந்தோம். நியு யார்க் வீதிகளில் புறாக்களை நிறைய பார்த்தோம். நாங்கள் அமர்ந்திருந்த கேளரி படிக்கட்டுகளில் மக்களுக்கு நடுவே ஒரு புறா பயம்மில்லாமல் நடந்து வந்தது. அமெரிக்காவில் எங்குமே பறவைகளுக்கு மணிதர்கள் இடம் பயம் இல்லை. மனிதர்கள் பக்கத்தில் நடந்து சென்றால் கூட  பயமில்லாமல் நிற்கும். ஆனால் நியு யார்க்கில் ஒரு வெள்ளை புறாவை கூட நான் பார்க்கவில்லை. புறாக்கள் கூட அழுக்காக இருப்பதாக தோன்றியது.

No comments:

Post a Comment