Friday, May 30, 2014

நியூ யார்க் பயணக் கட்டுரை - 4

மே 23 காலை நேரம் கழித்துதான் எழுந்தோம். எல்லா நாளும் அப்படி தான் இருந்தது. நடந்து நடந்நு அலுப்பாகி விடுகிறது. எவ்வளவு சிக்கரம் எழும்ப நினைத்தாலும் செய்ய முடியவில்லை. சரி, பழக்கமிருந்தால் தானே அதெல்லாம் நடக்கும். எப்படியோ எழுந்து விடுதியிலே காலை உணவு, அதற்கும் சேர்த்து தான் கட்டனம் வாங்குகிறார்கள். பெரும்பாலும் ரொட்டி, கேக்கள் தான், மற்றபடி சீரியல்ஸ், பால், பழரசம், முட்டை. முன்பொரு விடுதியில் பேன் கேக் மாவு இருக்கும் எடுத்து அகப்பையில் ஊற்றி சுட்டு கொள்ள வேண்டியது தான்.

சாப்பிட்டு கிளம்பி, ரயில் ஏறி நியூ யார்க் நுழைவதற்கு மதியம் 1 மணி ஆகிவிட்டது. ஆனால் என்ன, இது நியூ யார்க், தூங்க நகரம், என்னை போன்ற ஆட்களுக்கு ஏற்ற இடம். சில சுற்றுலா தளங்கள் இரவு 7, 8 மணி வரை கூட திறந்து இருக்கிறது. ம்யூசியம் மட்டும் தான் 5, 6 மணிக்கு மூடி விடுகிறார்கள். 

முதிலில் போக முடிவு செயுதிருந்தது, ம்யூசியம் ஆஃப் மாடர்ன் ஆர்ட்ஸ். அது 53வது வீதி அருகே இருந்தது அதற்கு முன்னால் நியூ யார்க் பாஸ் கவுன்டரில் சென்று ரசிது காட்டி பாஸை வாங்கி ஆக வேண்டும். அதை செய்துவிட்டு ம்யூசியத்திற்கு வந்தோம். மழை பெய்ய ஆரம்பித்திருந்தது. அருங்காட்சியகத்தில் நுழைந்தோம் அங்கேயே தோள் பையை வைத்து செல்வதற்கு ஒரு இடம் இருந்தது, வைத்து விட்டு முதல் தளத்தில் இருந்து துவங்கினோம். மொத்தம் 5 தளங்கள்.





முதல் தளத்தில் சிற்பங்கள். மாடர்ன் சிற்பங்கள். கற்களாலும், உலோகத்தாலும் செய்யபட்ட சிற்பங்கள். இரும்பால் செய்ய பட்ட ஒரு ரோஜா பூ.. என பல இருந்தன. அதை பார்த்து விட்டு மேல் தளத்திற்கு சென்றோம். மாடர்ன் ஓவியங்கள், சிலவற்றையே சிரமப்பட்டு ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடிந்தது, மற்றவை மூளைக்கு சிக்கவில்லை. முந்தய நூற்றண்டுகளில் ஓவியங்கள் இருப்பதை இருப்பது போல் பிரதி எடுப்பதற்காக தான் வரையப்பட்டது. ஆனால் கேமராவின் கண்டு பிடிப்புக்கு பின் அந்த ஒவியங்களின் தேவை இல்லாமல் ஆகிவிட்டது. அப்போது ஓவியங்கள் புதிய கலை வடிவம் பெற்று வந்தது. இருப்பதை இருப்பது போல் வரைய அவசியம் இல்லை, ஓவியங்களின் மூலம் இல்லாததை, கற்பனையில் தோன்றுவதை, கருத்து சொல்வதை என பல வகையான விஷயங்களுக்கு ஒவியம் ஊடகமாக அமைய தொடங்கியது. அதுவே நவீன ஓவியம்.


சிக்மர் போல்க்ன் ஒவியங்கள் பல அரைகளில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.கோத்தே, ஜாஸ்பர் ஜான்ஸ் போன்ற பலரின் ஓவியங்களும் அங்கு வைக்கப்பட்டிருந்தது. பல வகையான ஒவியங்கள், வண்ண கலவையிலான ஒவியங்கள், வண்ண புள்ளிகளாலேயே வரையப்பட்ட ஓவியங்கள், ஒரே இடத்தை, ஒரே கோனத்தில் வெவ்வெறு வண்ணங்களில் வரைந்த சில ஒவியங்கள் இருந்தது. அவை கூட்டாக பார்த்து பொருள் கொள்ள வேண்டியது போலிருக்கிறது. ஆங்காங்கே தொலைகாட்சிகளில் சில வீடியோக்கள் ஓடி கொன்டு இருந்தது, ஒன்று கூட என்ன சொல்ல வருகிறது என்று புரிந்து கொள்ள முடியவில்லை. 

பல வருடங்களாய் வளர்ந்து வந்த மின் ஒளி தொழில் நுட்ப வளர்ச்சியை காட்சிக்கு வைத்திருந்தார்கள். புகைபட கேளரி ஒன்று இருந்தது. சர் ரியலிஸ்டிக் ஓவியங்கள். இன்னும் பல வகையான ஓவியங்கள் மற்றும் கலை பொருட்களால் நிறைந்து இருந்தது. கட்டயமாக இதை  எல்லாம் புரிந்து கொள்ள ஒரு பயிற்சி தேவை. ஒரு பாமர தனமாக இந்த அருங்காட்சியகத்தை ரசித்து விட்டு வந்தேன் என்று தான் சொல்ல வேண்டும்.


கால் வலிக்க ஆரம்பித்து விட்டது. ஒவ்வொரு அருங்காட்சியகமும் பெரிது பெரிதாக இருந்தது. ஆங்காங்கே உட்கார்ந்து உட்கார்ந்து தான் எல்லாவற்றையும் சுற்றி பார்த்தோம். அங்கிருந்து வெளி வந்த போதும் மழை பெய்து கொன்டு இருந்தது. குடை பிடித்து கொன்டு மெதுவாக நடந்து போனோம். ஆன்கள் இங்கு பெரும்பாலும் நீள கம்பி குடை தான் வைத்திருந்தார்கள்.

ராக்பெல்லர் சென்டரில் இருக்கும் ஜீ ஈ பில்டுங்கின் மேல் பார்வை மேடை (Observatory deck) இருந்தது. இதை "Top of the Rock" என்று அழைக்கிறார்கள். இதே கட்டிடத்தில் தான் NBC TVயின் ஸ்டுடியோ உள்ளது. அவ்வளவு பெரிய கட்டிடமாக இருந்தாலும் பல கட்டிமங்களுக்கு நடுவே அதை தேடி கண்டு பிடிக்க மிகவும் சுத்த வைத்துவிட்டது. 67வது மாடிக்கு லிப்டில் சென்றோம். 70 மாடிகள் கொன்ட கட்டிடம் இது. ஆனல் இதை விட பல உயரமான கட்டிடங்கள் நியூ யார்க்கில் இருக்கிறது.  67, 68, 69 மாடி மூன்றிலும் சென்று பார்பதற்கு அனுமதிக்கிறார்கள். அந்த உயரத்தில் இருந்து நகரின் பெரும் பகுதி தெரிகிறது, அதற்கு அப்பால் மேகம் மறைத்துவிடுகிறது. பல புகை படங்கள் எடுத்து கொன்டோம். எல்லோரும் அதை தான் செய்து கொன்டுருந்தார்கள். இடம் தெரிந்தவர்கள் கட்டிடங்களை சுட்டி பெயர் குறிப்பிட்டு கொன்டிருந்தனர். 

அங்கிருந்து வெளி வந்ததும். ஷாலினிக்கு பசி தாங்க முடியவில்லை. சுற்றி பார்த்து கொன்டே இருந்தத்தில் மதியம் சாப்பிட மறந்துவிட்டோம். உணவகம் தேடி அலைந்தோம், சிப்பாட்லே கண்னில் தட்டுப்பட்டது. ப்ராட் வேயில் நடந்து மேடம் டுஸார்ட் சென்றோம். மெழுகு பொம்மைகளாள் ஆன காட்சியகம். பிரபல ஹாலிவுட் நடிகர்கள், அரசியல் தலைவர்கள், அமேரிக்க ஜனாதிபதிகள், விளையாட்டு வீரர்கள், இசை கலைஞர்கள என பல பேரின் உருவங்கள் மெழுகு பொம்மையாக செய்து வைக்கப்பட்டுருந்தது. நம் நாட்டு அமிதாப் பச்சனும், ஷாருக்கானும் கூட இருந்தார்கள். லிபர்டி ஸ்டாட்சிவின் முகம், கோரில்ல உருவமும் இருந்த்து. சில சிலைகள் தத்ருபமாக இருந்தது. எல்லாரும் இஷ்டத்திற்கு புகைபடம் எடுத்து கொன்டனர். ஆண்கள் நடிகைகளை கட்டி பிடித்தவாறு புகைபடம் எடுத்து கொன்டனர். பெரும் தலைவர்களுக்கு அருகில் குறும்பு தனமாய் ஷேஷ்டை செய்து சிலர் படம் எடுத்து கொன்டனர். நான் ஜாக்கி சானுடனும், மைக்கல் ஜாக்ஸன் உட்பட பலருடன் புகைபடம் எடுத்த் கொன்டேன். கேட்டி பெர்ரியுடனும். ஷாலினி தன் அபிமான ஷாருக்கானுடன் எடுத்து கொன்டாள்.



மேடம் டுஸார்ட் உலகில் பல இடங்களில் உள்ளது. அவர்களின் இனைய தளத்தில் அனைத்து கிளைகளில் இருக்கும் பொம்மைகளின் புகை படங்கள் சில வற்றை போட்டிருந்தார்கள். அதனால் பல எதிர்பார்ப்புடன் சென்றோம். ஆனால் நியூ யார்க்கில் இருந்த்தில் நாங்கள் எதிர் பார்த்தது சிலவை இல்லை. அது ஏமாற்றம் அளித்தது. ஹ்ரித்திக் ரோஷனிடம் புகைபடம் எடுக்க நினைத்த ஷாலினிக்கோ பலத்த ஏமாற்றம். சிறிது நேரம் கழித்து நியூ யார்க்கிலேயே சாப்பிட்டு விட்டு விடுதிக்கு திரும்பினோம்.

Thursday, May 29, 2014

நியூ யார்க் பயணக் கட்டுரை - 3

டைம் ஸ்க்யரின் பக்கவாட்டிலேயே ப்ராட்வே வீதி நெடுக்காக செல்கிறது. பல தொலைகாட்சி நிறுவனங்களின் மேடை நிகழ்வுகள், நட்சத்திர பேட்டிகான அரங்கங்கள் அங்கு உண்டு. உதாரனமாக டேவிட் லேட்டர்மேன் லேட் ஷோ. அது போக பல இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள், காமேடி ஷோக்கள் என நடக்கும். அதற்கு டைம் ஸ்க்யரிலேயே டிக்கட் விநியோகம் செய்யும் ஒரு மையம் இருந்தது. அதற்கு முன்னால் நீளமான ஒரு வரிசை நின்று கொன்டு இருந்தது. விலைகள் அதிகமாகவே இருந்தது.

டைம் ஸ்கயரில் கறுப்பர்களை அவ்வளவு பார்க்கவில்லை என்று தான் தோன்றியது. அங்கு உள்ளுர் மக்களும் அவ்வளவாக இல்லை. லிபர்டி ஸ்டாட்சு போல் வேட அனிந்த சிலருடன் நின்று மக்கள் புகைபடம் எடுத்து கொன்டனர். சரி அப்படியே நகரின் உள் நகருவோம் என்று ப்ராட்வேயில் இறங்கி நடக்க ஆரம்பித்தோம்.

ராக்பெல்லர் சென்டருக்கு போகலாம் என்று அழைத்து சென்றால் ஷாலினி. 'நி என்ன பெரிய ராக்பெல்லர் ஃபெமலியா' என்று கேட்போமே அதே ராக்பெல்லர் தான். ஜான் டி. ராக்பெல்லர் 20ம் நூற்றன்டின் பெரிய தொழில்அதிபர், பணக்காரரர். அவரது குடும்பத்தால் அமைக்கபட்ட ராக்பெல்லர் சென்டர் நகரின் நடுவே 19 உயரமான கட்டிடங்களை உள்ளடக்கியது. அதில் மிகவும் உயரமான GE buildingம் அடக்கம். அமெரிக்க அரசு இந்த ராக்கபெல்லர் சென்டரை ஒரு தேசிய வரலாற்று சின்னமாக அறிவித்துள்ளது.

ஜான் டி. ராக்பெல்லர்
ராக்பெல்லர் சென்டர்



இதே GE கட்டிடத்தின் மேல் ஏறி பார்பதற்கு எங்களது நியு யார்க் பாஸை உபயோகிக்கலாம் ஆனால் நாளை தான் அதை உபயோகிக்க ஆரம்பிப்பது என்று இருந்ததால் வெளியே மட்டும் சுற்றி பார்த்தோம். அங்கிருந்து பொடி நடையாக சென்ட்ரல் பார்க்கிற்கு நடந்தோம். நியு யார்க் மன்ஹாட்டன் பகுதியின் அங்கு பெரும்பாலன தெருக்களுக்கு எண்கள் தான் பெயராக இருந்த்து. 45வது வீதி, 46வது வீதி என்று மேற்கிலிருந்து கிழக்கு செல்லும் வீதிகளுக்கும், வட தென் வீதிகள் 1ம் அவென்யு, 2ம் அவென்யு என்று பெயரிட பட்டிருந்தது.

உள்ளுர் பெண்கள் நல்ல மேக்கப் அணிந்திருந்தார்கள், அவர்களின் உடை வெளியுரிலிருந்து வந்தவர்களில் இருந்து தனிதன்மையோடு தெரிந்த்து. பொதுவாக உள்ளுர்வாசிகள் வேகமாக நடக்கிறார்கள். அவர்களுக்கு அந்த நெரிசலிலும், ட்ராப்கிலும் எப்படு வேகமாக செல்வது என்று நன்றாக தெரிந்திருக்கிறது.  கவர்ச்சியான ஆடை அமெரிக்கா எங்கும் உள்ள பெண்கள் அங்கும் அணிந்திருந்தார்கள். இருந்தாலும் அதிலும் ஒரு புதுமை தெரிந்தது. உள்ளுர் ஆன்களும் நல்ல ஆடைகள் அணிந்திருந்தார்கள். பெரும்கார்பரேட் அலுவகங்களுக்கு அருகில் நடக்கயில் கோட் அணிந்த ஆண்களை பார்க்க முடிந்தது. அவர்களின் சிகையலங்கரங்கள் வித்தியாசமாகவும் புதுமையாகவும் இருந்தது.

பெண் போல் பாவனை காட்டி நடக்கும் ஆண்களை நிறையவே பார்க்க முடிந்தது. நல்ல உடல் கட்டு, நல்ல உடை அணிந்து நலினத்துடன் நடந்து செல்லும் ஆண்கள் சிலரை கண்டேன். ஆணும் ஆணும் கை கோர்த்து செல்லும் ஜோடிகள் சில இருந்தன். புருவத்தின் ஒரங்களை மழித்து, புருவங்களை வரைந்து, புருவங்களில் ஜோலிக்கும் கடுக்கன் அணிந்து, காலின் ரோமங்கலை மழித்து, பிங்க் நிற ஆடை அனிந்து, பெண் போன்ற நலினத்துடன் பேசும் விதம் என்று பல விஷயங்கள் அவர்கள் ஓரின சேர்கையாளர்கள் என்று தோன்ற செய்தது. ஆண்கள் கை கோர்த்து நடப்பது, பிங்க் ஆடை அனிவது இந்தியாவில் சாதாரனம். ஆனால் அமெரிக்காவில் அதற்கு அர்த்தம் இப்படி தான்.

மன்ஹாட்டன் நகரின் உயர்ந்த அடைந்த கட்டிடங்களுக்கு நடுவே 800 ஏக்கர்களுக்கு மேல் விருந்து கிடக்கறது இந்த சென்ட்ரல் பார்க். பார்க்கின் முகப்பை அனுகும் போது குதிரை வீச்சம் அடித்தது.  ஒற்றை குதிரை சாரட்டடுகள், வாடைகை சைக்கிள்கள் முகப்பில் இருந்தது. பார்க்கின் உள் குழந்தைகள் பல விளையாடி கொன்டிருந்தன. ஜாகிங் செல்பவர்கள், ஸ்கேட்டிங், சைக்கிள் ஓட்டுபவர்கள்,நாயுடன் வாக்கிங் போவர்கள் எல்லாம் அந்த மாலையில் நடந்து கொட்டிருந்தது.  நிறைய பறவைகள் இருந்தன, வித்தியாசமான நீல நிற பறவை ஒன்றை பார்த்தேன். நிறைய மரங்களும் புள் வெளியுமாக நிறைந்திருந்தது.

சென்ட்ரல் பார்க்
பார்க்கின் முன்னே ஒரு குறு மலை முகடு. அங்கே பல ஜோடுகள் உட்கார்ந்யு கொன்டு இருந்தது. பல் வேறு இணங்களும் கலந்து ஜோடியாக அமர்ந்து முத்தமிட்டு கொன்டிருந்தது. முகட்டின் உச்சியின் மறைவில் ஒரு டீன் ஏஜ் கூட்டம் பம்மலுடன் உட்கார்ந்நுருந்தது, என்ன என்று உத்து பார்த்தால் சிறுவர்கள் புகைத்து கொன்டு இருந்தனர். இந்த ஊர் சட்டம் படி 21 வயதுக்கு மேல் தான் புகைத்தல் அனுமதிக்கபட்டுள்ளது. அந்த பார்க் உள்ளுர்காரர்களுக்கு நம் சென்னை மெரினா பீச் போல என்று தோன்றியது.

அங்கு இன்னும் சிறிது நேரம் கழித்துவிட்டு கிளம்பி பொடி நடையாக டைம் ஸ்கயர் பக்கமே திரும்பினோம். வரும் வழியில் ஒரு சப் வேக்கு அடியில் இசை கலைஞர்கள் வாசித்து கொன்டிருப்பது கேட்டது. வரும் வழியில் ஒரு சைவ உணவகம் இருந்தது, சைவ உணவகப் வைக்கும் ஒரே ஆட்கள் இந்தியர்களாகதான் இருப்பார்கள். மெனுவை படித்து பார்த்ததில் அது ஊர்ஜிதமானது.வெஜ் பிரியானி இருந்தது. ஒன்று வாங்கி இருவரும் சாப்பிட்டோம் சூடாக நன்றாக இருந்தது. உப்பு கொஞ்சம் கம்மியாக இருந்தது. ஆனால் கடை கல்லாவில் இந்தியர்களே இல்லை, கருப்பர்கள் தான் இருந்தார்கள். அவர்களே சமைத்துவிடுவார்கள் போலும்.




9 மணி அளவில் தான் இந்த ஸ்பிரிங், சம்மர், ஃபால் ஸீஸனில் இருட்டம். நாங்கள் வரும் போது டைம் ஸ்கயர் இருட்டி இருந்தது. இரவில் அது இன்னும் வண்ண ஒளியுடன் அழகாக இருந்தது. அங்கு கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தோம். 9 அளவிலும் அங்கு தரையில் புறாக்கள் இரை தேடி அலைகிறது. அஅந்த அளவுக்கு அங்கு பகல் போல வெளிச்சம். ங்குள்ள சுற்றலா பயனிகள் அங்கு சாப்பிடும் எச்சங்களையே தின்று வளரும் புறாக்கள். டைம் ஸ்கயரின் ஒரு ஓரத்தில் ஜட்டி மட்டும் அனிந்து கொன்டு ஒரு கருப்பன் கிடாருடன் பாட்டு பாடி கொன்டு இருந்தான். அவனோடு சில பெண்கள் நின்று புகைபடம் எடுத்து கொன்டனர். அவன் பல கோமாளிதனத்துடன் புகைபடத்திற்கு போஸ் கொடுத்தான். அடுத்த நாற் அதே இடத்தில் இன்னொரு கருப்பன் சட்டையில்லாமல் கோமாளித்தனம் செய்து கொன்டுருந்தான்.

தொடர்ந்து நடந்து கொன்டே இருந்ததில் கால் மிகவும் வலித்தது. அங்கிருந்து எம்பயர் ஸ்டேட் பில்டிங்கிற்கு நடந்து சென்றோம். அங்கே கொஞ்ச நேரம் சுற்றி விட்டு, இரவு உணவு பனேரா எனும் உணவகத்தில் வாங்கிக் கொன்டு வந்து ஹெரால்டு ஸ்கயர் எனும் இடத்தில் வைத்து சாப்பிட்டோம். இங்கு ஆங்காங்கே ரோட்டை மறித்து பயனிகள் அமர நாற்காலியும் மேசையும் போட்டு வைத்துள்ளார்கள். அது ஒரு தல்ல வசதி. சாப்பிடவுடன் மழை வந்தது. இரவு 10;30 இருக்கும் என்று நினைக்கிறேன். மழையில் சப் வே ஸ்டேசன் கச்டு பிடிப்பது சிரமமாகி விட்டது. திரும்பி ஹாரிசன் வந்து காரை எடுத்து கொன்டு ஈஸ்ட் ஆரஞ்சு சென்று விடுதியில் நுழைந்தோம்.

என்னை பற்றி

என் பெயர் ஹரீஷ். மென்பொருள் பொறியாளர். பிறந்தது 1985ல் கோவையில். 2006ல் இளங்கலை பொறியாளர் பட்டம் பெற்றேன். நான்கு வருடம் சென்னையில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். பிறகு மேற் படிப்பிற்க்காக அமெரிக்காவில் டெட்ராயட் நகருக்கு வந்தேன். படிப்பு முடிந்து இப்போது டெட்ராய்ட் அருகில் இருக்கும் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். 2013ல் திருமணம் நடந்தது.

வரலாறு, இலக்கியம், மொழி, தத்துவம், சமூகம் ஆகியவற்றில் ஆர்வம். அவற்றை பற்றி எனக்கு தெரியவரும், தோன்றும் விஷயங்களையே இந்த தளத்தில் எழுதிவருகிறேன்.

எனது சிறுகதைகள்

எழுத்துப்பிழைகள்:

எலுத்து பிளைகலை பற்றி நான் அவ்வளவு கவளை படுவதிள்ளை. ன-வன்னா வகைகலிழும், லனா, ரனா வகைகழிலும்  சற்று தடுமாருவேண்.

ஆணால் குரிலை கூரில் என்று எலுதமாட்டேன். சந்தி பிலை என்று ஒன்று இருப்பதே எனக்கு இன்னும் தெறியாது. ;)

தொடர்ப்பு கொள்ளவதற்கான இமெயில் முகவரி: b.harish85அட்gmail.com
 

Wednesday, May 28, 2014

நியூ யார்க் பயணக் கட்டுரை - 2

அமெரிக்க நகரங்களை சுற்றி பார்ப்பதற்கு, அங்குள்ள சுற்றுலா தளங்களுக்கு செல்வதற்கு முன்னதாகவே மொத்தமாக அனுமதி சீட்டை சில தனியார் நிறுவனங்கள் தந்து விடுகின்றன. சிட்டி பாஸ், நியு யார்க் பாஸ் போன்றவை. அந்த சுற்றுலா தளங்களில் தனி தனியாக வாங்கும் அனுமதி சீட்டை விட மொத்தமாக வாங்குவதால் இதில் விலை குறைவாக கிடைத்துவிடுகிறது. ஆனால் ஒவ்வொரு அனுமதி சீட்டும் உபயேகிக்க ஆரம்பத்தித்தில் இருந்து 3 அல்லது 5 நாட்களுக்குள் காலாவதி ஆகிவிடும். அதனால் நாங்கள் முதல் நாள் சென்று சேர்ந்த போதே 2 மணிக்கு மேலே ஆகிவிட்டதால், அந்த நியு யார்க் பாஸை அடுத்த நாளில் இருந்து உபயோகிக்க தொடங்கலாம் என்றும் அதனால் இன்று நியு யார்க் நகரில் சுற்றி திரியலாம் என்றும் முடிவு செய்தோம்.

இறங்கி சிறிது நேரத்திலேயே ஷாலினிக்கு பசி. இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை ஏதாவது சிறிதளவு சாப்பிடாக வேண்டும். அதனால் ஒரு உணவகத்தை தேடி அலைந்தோம். இடம் தெரியாத இடத்தில் ஒரு உணவகத்தை தேடுவது நேரத்தை அதிகம் எடுத்து கொள்கிறது. அதுவும் அங்கு சைவ உணவு கிடைக்க வேண்டும்.

சாலைகளில் அகல நடைபாதை இருந்த்து ஆனாலும் ஜனங்களின் தெரிசல். இந்திய நகரங்களில் இருப்பது போல் இருந்தது. அதிக மக்கள் இல்லாத மற்ற அமெரிக்க ஊர்களில் இருந்து வந்து இத்தனை மக்கள் நிறைந்து கலை கட்டிய இந்த வீதிகளை பார்ப்பது புத்துனர்வு தருவதாக இருந்தது. சாலைகளிலும் கார்களின் நெரிசல். இதனாலேயே நான் காரை ஊருக்கு வெளியே நிறுத்திவிட்டு வருவது என்று முடிவு எடுத்தேன். தனி நபர் கார்களை விட மஞ்சள் நிற டாக்ஸிகள் தான் அதிகம். ஹாரன் ஒலி கேட்டு கொன்டே இருத்தது. சாலையும், நடைபாதையும் தூசி நிரம்பி அழுக்காக இருந்தது. எங்கும் உயர்ந்த கட்டடங்கள் சாலையை அடைத்து கொன்டு இருந்தது. பழைய கற்களினாலான, வண்ணம் பூசபடாத கட்டிடங்கள். ஷிகாகோ நகரம் இப்படி இருக்கவில்லை. அங்கும் உயர்ந்த கட்டிடங்கள் இருந்தது, ஆனால் இவ்வளவு அதிகமான கட்டிடம் இல்லை. அங்கு சாலையும் நடைபாதையும் இன்னும் விசாலமாக இருந்தது, சுத்தமாக இருந்தது. ஆனால் இது அதை விட பெரிய நகரம் என்பதால் இந்ந நெரிசல் புரிந்து கொள்ள கூடியதே. 


இங்கு தான் சாலையில் பெட்டி கடைகளை பார்க்க முடிந்தது. ஆங்காங்கே தெரு மூலைகளில் ஹலால் செய்யபட்ட அரபு உணவு விற்கப்பட்டது. ஆனால் அந்நகரில் அத்தனை முஸ்லிம்களை பார்க்கவில்லை. அந்த கடைகளின் தரத்தை பார்த்தால் அங்கு வாழும் நடு வர்கத்திற்கும் கீழ் உள்ள மக்கள் வாங்கி சாப்பிடும் கடை போல் தெரிந்தது. ஆங்காங்கே புகை பொருள், பத்திரிகை, தின்பண்டம் விற்கும் கடை. அதை இங்கு நியூஸ் ஸ்டான்ட் என்று சொல்கிறார்கள். அந்த கடைகளில் எல்லாம் இந்திய துனை கண்டத்தை சேர்ந்த முகங்கள் தான் கடைகார்ர்களாய் காணபட்டனர். பிறகு ஆங்காங்கே கருப்பர்கள் பைகளையும், கொடைகளையும் குவித்து வைத்து கூவி கூவி விற்று கொன்டு இருந்தார்கள்.

எப்படியோ ஒரு உணவு விடுதியை தேடி கண்டு பிடித்தோம். அங்கு நான் ஒரு வெஜ்ஜி பீட்ஸா துன்டை சாப்பிட்டேன். ஷாலினி மொட்ஸரெல்லா பனினி வாங்கி கொன்டாள். வாயில் வைக்க விளங்காத ஒரு சாப்பாடு அது. சீஸில் ஏதோ ஒரு வாடை, அதில் சவித்து போட்டது போல் ஸ்பினச் பச்சையாக இருந்தது. சரி வந்த இடத்தில் ருசிக்கு முக்கியத்துவம் இல்லை, காட்சிக்கு தான் என்று சாப்பிட்டு அந்த உணவகத்தில் சிறுநீர் கழித்துவிட்டு கிளம்பினோம். இந்த சுற்றுலா செல்லும் போதெல்லாம் அதிகம் தொல்லை தந்து நேரத்தை வீனடிப்பது இந்த சிறுநீர் பிரச்சனை தான். அதனால் கிளம்பும் போதே அளந்து தண்ணிர் குடிப்பது, கிடைத்த சமயத்தை பயன்படுத்தி கொள்வதென்று முடிவு எடுத்தேன். அது பயன் தந்தது.

உணவகத்திற்கு அருகிலேயே டைம் ஸ்க்யர் இருந்தது. ஷாலினி தான் வழி நடத்தி கூட்டி சென்றாள். சுற்றுலா தளங்களும், அதற்கு வழி பார்த்து வைக்கும் பொறுப்பும் அவளது. உயரமான கட்டங்களை அன்னாந்து பார்த்து கொன்டும் புகைபடம் எடுத்து கொன்டும் நடந்தோம். நாங்கள் அப்படி பார்த்து கொன்டு நடப்பதே வெளியூர்காரர்கள் என்று காட்டி கொடுத்துவிடும். ஆனால் அங்கு உள்ளுர்காரர்கள் குறைவாக தான் தென்பட்டார்கள். நிறைய சுற்றுலா பயணிகள் தான் இருந்நது போல் தோன்றியது.

டைம் ஸ்க்யர் உயரமான கட்டடங்களுக்கு நடுவே இருக்கும் ஓர் சதுக்கம். அந்த சதுக்கத்தை சுற்றி கட்டிடங்களின் வெளி சுவரில் மாபெரும் விளம்பர பலகைகளில் விளம்பர படங்கள் ஓடி கொன்டு இருந்தது. ஒளி வெள்ளமாக நிரைந்நிருந்த்து. ஏராளமான சுற்றுலா பயனிகள் நிரம்பி இருந்தார்கள். எல்லாரும் பல் வேறு விதமாய் ஃபோட்டோ எடுத்து கொன்டு இருந்தனர். முழுக்க முழுக்க மணிதனால் உருவாக்கபட்ட செயற்கை அழகு.
டிஜிட்டல் யுகத்தின் ஒரு சாதனை சின்னம் போல் இருந்தது அந்த இடம். நாள் தோறும் விளம்பரங்களை கண்டு சலித்து போயிருக்கும் மக்களை விளம்பரங்களை கொன்டே கவர்வது ஒரி விந்தை தான். துனி விளம்பரங்கள், திரைபட, சின்னத்திரை முன்னோட்டங்கள், குளிர் பானம், மின்னனு சாதனம், நகரில் ஓடும் மேடை நிகழ்வுகள் என்று பலவற்றிற்கும் விளம்பரம் ஓடி கொன்டு இருந்தது. அதில் பெண் கவர்ச்சி, அரை நிர்வான விளம்பரங்களும் பூதாகார அளவில் ஓடி கொன்டு இருந்தது.டைம் ஸ்க்யர் நியூ இயர் பால் ட்ராப் மிகவும் பிரசித்தி பெற்றது. அந்த சமயத்தில் இந்த சதுக்கத்தில் இடம் கூட கிடைக்காமல் போய்விடும். எந்நேரமும் அங்கு கூட்டம் இருந்து கொன்டு இருந்தது.

டைம் ஸ்க்யர்

எல்லா நாட்டு மக்களும் அங்கு இருந்தார்கள். அதில் இந்தியர்களும் அதிகமாக இருந்தார்கள். எல்லா மக்களும் கண் வழியே சுற்றி பார்பதை மறந்து விட்டிருந்தார்கள். கேமரா திரையில் தான் பார்த்து கொன்டிருந்தார்கள். சீனர்கள் புகைபடம் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் கொன்டு இருந்தனர். அதுவும் சீன பெண்கள் வித விதமான கை முத்திரையுடன், முக பாவனையுடனும் புகைபடம் எடுத்து கொன்டனர். இந்தியர்களும் சலைக்காமல் எடுத்தார்கள். இதற்கெல்லாம் கேமராவும், நினைவில் நிறுத்தி கொள்வது மட்டும் காரனமல்ல. ஃபேஸ்புக் - அதற்கு தான் இத்தனை ஆர்பாட்டமும். வெள்ளையர்கள் ஒன்றிரண்டு போட்டகளுடன் நிறுத்தி கொன்டார்கள்.

அங்கு பார்வையாளர்கள் அமர்வதற்கு ஒரு கேளரி அமைத்திருக்கிறார்கள். அந்த படிகளில் அமர்ந்து வேடிக்கை பார்த்து கொன்டிருந்தோம். நியு யார்க் வீதிகளில் புறாக்களை நிறைய பார்த்தோம். நாங்கள் அமர்ந்திருந்த கேளரி படிக்கட்டுகளில் மக்களுக்கு நடுவே ஒரு புறா பயம்மில்லாமல் நடந்து வந்தது. அமெரிக்காவில் எங்குமே பறவைகளுக்கு மணிதர்கள் இடம் பயம் இல்லை. மனிதர்கள் பக்கத்தில் நடந்து சென்றால் கூட  பயமில்லாமல் நிற்கும். ஆனால் நியு யார்க்கில் ஒரு வெள்ளை புறாவை கூட நான் பார்க்கவில்லை. புறாக்கள் கூட அழுக்காக இருப்பதாக தோன்றியது.

Tuesday, May 27, 2014

நியூ யார்க் பயணக் கட்டுரை - 1

மெமோரியல் டே மே 26 அமெரிக்காவில் கொண்டாட படுவதால் அந்நாள் விடுமுறை. ஒரு வருடத்தில் மிக குறைந்த நாட்களே  தேசிய விடுமுறையாக US ல்  அனுசரிக்க படுகிறது. அதனால் இந்த விடுமுறையை வீணடிக்காமல் நியூ யார்க் நகரம் செல்ல முன்கூட்டியே நானும் மனைவியும் திட்டமிட்டுவிட்டோம். மே 21 கிளம்பி வழியில் ஓர் இரவு தங்கி விட்டு மொத்தம் ஐந்து நாட்களும் நியூ யார்க்கில் கழிக்க திட்டம். நியூ யார்க் நகரத்தில் தாங்கும் விடுதிகளின் வாடகை அதிகம் இருந்ததால் நியூ யார்க் நகர எல்லையில் இருக்கும் நியூ ஜெர்சியின் ஈஸ்ட் ஆரஞ்சு என்னும் இடத்தில் விடுதி முன்பதிவு செய்து விட்டோம்.


மே 21 2 மணி அளவில்  அலுவகத்தில் இருந்து சீக்கிரம் கிளம்பி வந்துவிட்டேன். மதியம் 2:30 மணிக்கு கிளம்பினோம். அமெரிக்கர்கள் அதிகம் விரும்பும் வெயில் கொளுத்தி கொண்டிருந்தது. முதல் பயணம் கிட்ட தட்ட 500 மைல்கள் கார் ஓட்டி கொண்டு செல்ல வேண்டும்.  பென்சில்வானியாவில் டேன்வில்லெவில் இரவு தங்கள். போகும் வழியை காரின் GPS காட்டிவிடும். கிளம்பி முக்கால் மணி நேரத்திலேய ஓஹயோ மாகாணத்தில் உள்ள டோலீடோ என்னும் நகரத்தை அடைந்தோம். அதை  அடையும் தோறும் வழி  எல்லாம் தொழிற்சாலைகள் பல இருந்ததை பார்த்தோம். இந்த டோலீடோ நகரம் நம் கோவை நகரத்துக்கு சிஸ்டர் சிட்டி ஆகும்.


மிசிகனில் நான் இருக்கும் இடத்தில இருந்து வெகு தூரத்திற்கு சென்றால் தான் விவசாய நிலங்களை  பார்க்க முடியும் ஆனால் ஓஹயோ மாகாணத்தில் டோலீடோ நகரத்தில் இருந்து சிறிது விலகியதுமே விவசாய நிலம் ஆரம்பித்து விட்டது.அது ஏன் என்று பிறகு திரும்பி வரும் போது  புரிந்தது. அலுவலகத்தில் உடன் வேலை செய்பவர்கள் சுங்க சாலைகளை தவிர்க்க சொன்னார்கள். அதன் பேரில் avoid tolls என்று GPSயை அமைத்து விட்டதால் அது சுங்கம் கட்ட வேண்டிய Freewayயை தவிர்த்து விட்டது அதனாலேயே அந்த விவசாய நிலங்கள் கண்ணில் பட்டது போலும்.  எந்த வவிவசாய நிலத்திலும் எதிவும் பயிர் செய்ய படவில்லை. பனி காலம் இப்போது தன் முடிந்துள்ளது. இனிமேல் தான் பயிரிடுவார்கள் என்று நினைகிறேன். எல்லா விவசாய நிலத்திலுமே பான் (Barn),  ஒரு உயரமான தோட்டத்து வீடு அமைக்க பட்டிருக்கும்.
பான்

ஓஹாயோ மாகாணத்தில் OH 2 எனும் பிரீவேயில் சென்றோம் ஈரி குளதின் கரையின் ஓரத்தில் அமைந்த வழி. டொலெடொவில் இருந்து 1 மணி  நேரத்திற்குள் கிளீவ்லன்ட் நகரத்திற்கு சென்றுவிட்டோம் அங்கு துறைமுகங்கள் இருந்தது. 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட டெட்ராய்ட் இருந்து கிளீவேலன்ட் வழியாக நியூ யார்க் சீல்லும் கப்பல் போக்கு வரத்து இருந்திருக்கிறது. இப்போது ஒவ்வொரு குடும்பத்திடமும் கார்கள் இருப்பதால் அது தேவை இல்லை.

US பிரீவேகளில் பயணம் செய்பவர்களின் வசதிக்காக சராசரியாக ஒவ்வொரு 30 - 40 மைல்களுக்கு ஒரு ஒய்வு வெளி - Rest area இருக்கும். கழிப்பறைகள், சிற்றுண்டி வாங்கும் எந்திரங்களும், மேப்பும், அருகமையில் உள்ள  சுற்றுலா தளங்களை பற்றிய விவரங்களும் இருக்கும். ஓஹாயோ மாகாணத்தில் சாலை குறியீடுகள் குழப்பகரமாக இருந்ததால் ஒரு  ஒய்வு வெளியை தவற விட்டு அடுத்த ஒய்வு வெளியை நெடு நேரம் காத்திருந்து பிடித்தோம்.

மாலை 6:30 மணி அளவில் வீட்டிலிருந்தே கட்டி வந்த சாப்பாட்டை சாப்பிட்டோம். சாப்பாட்டை கட்டி கொண்டு வந்து விடுவது காசு மிச்சம் செய்வதுமில்லாமல் ஹோட்டல் தேடி நிறுத்தும் நேரத்தையும் மிச்சம் செய்கிறது. சிறிது நேரத்தில் பென்சில்வினியா அடைந்து விட்டோம். நியூ யார்க் செல்வதற்கு பென்சில்வேனியாவை குறுக்காக கடந்தாக வேண்டும். பென்சில்வேனியா முழுக்க I80 என்ற பிரீவேயில் பயணம் செய்தோம் இரண்டே லேன்கள் கொண்ட சாலை. ஆங்காங்கே சாலை சீரமைப்பு பனி நடந்தமையால் வேகம் அளவு குறைக்க பட்டிருந்தது. 

மிசிகன் மாகாணத்தில் 70 மைல் தான் அதிக பட்ச வேகம். ஓஹயோ, பென்சில்வேனியா, நியூ ஜெர்செய்யில் அதிக பட்ச வேகம் 65 மைலாக இருந்தது. போகும் போதே முடிவு செய்துவிட்டேன் வேக அளவை மீற கூடாதென்று.

பென்சில்வேனியா சாலையின் இரு புறமும் அடர்ந்த காடாக இருந்தது. அடர் பச்சை நிற மரங்கள். ஒரே மாதிரியான மரங்கள். மேடு பள்ளமாக மர வெளி. மர பரப்புக்கு கிழே மலை ஒளிந்திருந்தது. மலைகளுக்கு வகுடு எடுத்து சீவி விட்டது போல் மரங்கள் ஒரே உயரத்தில் சீராக பரவலாக அமைந்திருந்தது. அங்கங்கே பணி படலம்  mist சாலையின் காட்சியை குறைத்தது. வழி நெடுக ஆங்கங்கே மான்கள் வண்டிகளில் அடிபட்டு செத்துக்கிடந்தது. இரவு தொடங்கி விட்டுருந்த்தல் ட்ரக்குகள் சாலையில் அதிகம் இருந்தது.  

போகும் வழியில் கடைகள், வீடுகள், விவசாய நிலங்கள், எதுவுமே தென் படவில்லை. ஏதோ காட்டுக்குள் சாலை போட்டிருப்பார்கள் போலும். ஆனால் 30 மைலுக்கு ஒரு ஒய்வு வெளி இருந்தது. 10 மணிக்கு மேல் சாப்பாடு வாங்கி கொண்டு தங்கும் விடுதிக்கு சென்று விடலாம் என்று இருந்தோம். என் மனைவி ஷாலினி எச்சரித்தது போலவே 10 மணிக்கு மேல் நாங்கள் செல்லும் வழியில் எந்த கடைகளுமே இல்லை. அப்படியே இருந்தாலும், சைவ உணவு கடைகளாக இல்லை. இரவு 11:30 மணிக்கு விடுதிக்கு சென்று சேர்ந்தோம். எந்த உணவகமும் அந்த நேரத்தில் திறந்திருகாது. அந்த நேரத்தில் திறந்து இருக்கும் Drive through உணவு கடைகளும் அருகில் ஏதும் இருக்கவில்லை. அதனால் அருகில் இருக்கும் Walmart சென்று கேக், நொறுக்கு தீனி, வாழை பழம் வாங்கி வந்து சாப்பிடுவிட்டு தூங்கினோம். அவ்வளவு பசி இல்லாததால் அது போதுமாக இருந்தது.


நல்ல வேலையாக நாங்கள் விடுதி  வந்து சேரும் வரை மழையேதும் இல்லை. விடுதி வந்து டிவியில் பார்த்தால் அந்த இடத்திற்கு storm warning அறிவுதிருந்தர்கள். இரவு நல்ல மழை பெய்தது. மே 22 காலை பத்து மணி அளவில் கிளம்பினோம் இன்னும் இரண்டரை  மணி நேர பயணம். பென்சில்வேனியாவின் மிச்ச தூரத்தையும் கடந்து நியூ ஜெர்செயின் கிழக்கு எல்லைக்கு சென்றாக வேண்டும். நியூ ஜெர்சி மாகானமும் மலைகளாக இருந்தது அனால் வெவ்வேறு பச்சை நிறத்தில் மரங்கள் சிறிதும் பெரிதுமாக தோன்றியது. பென்சில்வேனியாவிழும், நியூ ஜெர்செயிலும், சில மலை சரிவுகளில் Falling Rocks என்ற குறி இருந்தது. நியூ ஜெர்செர்யில் சில மலை  சரிவுகளை கம்பி வலையில்ட்டு போர்த்தி இருந்தார்கள். நியூ யார்க் நகரை நெருங்கும் வரை நியூ ஜெர்செய்யும் அமைதியான சாலையுடன் இருந்தது. அதே I80 பிரீவேயில் தான் சென்றோம் நியூ யார்க் அருகே சென்றதும் I280 என்ற ப்ரீவே தொடங்கியது. பரப்பான போக்குவரத்து தொடங்கியது நான்கு லேன் சாலையாக மாறியது.

நியூ யோர்கையும், நியூ ஜெர்செய்யையும் பிரிப்பது ஹட்சன் என்ற நதி. நியூ ஜெர்சியின் கிழக்கு எல்லையில் இருந்து நியூ யார்க்குக்கு நகரத்திற்கு ஒரு துரித ரயில் போக்குவரத்து PATH இருக்கிறது. 15 நிமிடத்திற்கு ஒரு வண்டி என 24 மணி நேரமும்  இருக்கிறது. நாங்கள் தாங்கும் விடுதி இருக்கும் ஈஸ்ட் ஆரஞ்சுக்கு பக்கம் ஹாரிசன் என்னும் இடத்தில இருந்து நியூ யார்க் 33வது வீதி வரைக்கும் அந்த ரயில் செல்லும். அதனால் நேராக ஹாரிசன் ரயில் நிலையத்திற்கே சென்று விட்டோம்.


நியூ ஜெர்சி ஹாரிசன் நகரத்தில் பிரீவேயில் இருந்து நகரத்திற்குள் நுழைந்தோம். காரை நிறுத்த பார்கிங் கண்டு பிடித்தாக வேண்டும். மிசிகன் மாகாண சாலை விதிக்கும் நியூ ஜெர்சி சாலை விதிக்கும் ஒன்று பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் சாலைகளில் நெரிசல் அதிகம், புது இடம், சாலையில் பூசபட்டிருக்கும் வெள்ளை, மஞ்சள் கோடுகள் எல்லாம் அழிந்திருந்தது அதனால் காருக்கு பார்கிங் கண்டு பிடிப்பது பெரும் பாடாக  ஆகிவிட்டது. பார்கிங் ஸ்டேஷன் முகவரி எதுவும் எடுத்து வராததால் தேடவேண்டியதாகி விட்டது.
புது இடம் என்பதால் ஒன் வேயில் நுழைந்து விட கூடாது, அபராத டிக்கெட் வாங்கிவிட கூடாது என்பதால் மெதுவாக தேடி கொண்டே சென்றோம். கடுப்பான உள்ளூர் வாசிகள் ஹாரன் அடித்தார்கள். அவ்வாறு ஹாரன் அடிப்பது ஒருவரை திட்டுவதற்கு சமம் ஆனால் பெரு நகரங்களில் அது சாதாரணம். எப்படியோ ஒரு வழியாக பார்கிங் கண்டு பிடித்து காரை நிறுத்தி விட்டு ரயில் ஸ்டேஷன்க்குள் நுழைந்தோம்.

இதை போன்ற நகர ரயில்கள் எல்லாம் ஒரு காசு அட்டையை தந்து விடுகிறார்கள் முன்னமே ஒரு 5 பயன்களுக்கான பணத்தை கொடுத்து அந்த அட்டையை பெற்று கொள்ள வேண்டும் பின்பு தேவை பட்ட ஸ்டேஷனில் swipe செய்து பயணம் செய்து கொள்ளலாம். அதை விநியோகிக்க ஒரு தானியங்கி எந்திரம்.
ரயில் ஸ்டேஷன் இரும்பு வாடையுடன் இருந்தது. ஹாரிசன் நகர சாலைகளும் அதிக தூசு படிந்து தான் இருந்தது. அந்த நகரத்தில் சிறிது சிறிதாய் நெருக்கமான வீடுகள். சாலையின் இரு ஓரங்களிலும் அவர்களுக்கான சாலைகள். அங்கு இந்தியர்கள் தான் அதிகமாக தென்ப்பட்டார்கள். அது ஒரு residental area. நியூ யோர்கில் பனி புரியும் அணைத்து நடுத்தர வர்க்க குடும்பங்களும் இது போன்ற எல்லையில் உள்ள நகரங்களில் வசிக்கிறது போலும் .

ஸ்டேஷனில் வெள்ளையர்கள் மிக குறைவாக தான் இருந்தார்கள். இந்தியர்கள், சீனர்கள், லத்தின் அமெரிகர்கள், கருப்பர்கள் தான் அதிகம் இருந்தார்கள். ரயில் வந்தது. ஹட்சன் ஆற்றை கடந்தோம். பெரும் பாலம் ஒன்று தெரிந்தது, சாலையாக இருக்க வேண்டும் நிறைய கண்டேய்னர்கல் இருந்தது. துறைமுக நகரமல்லவா. பாலைடந்த வீடுகள் சில. நெரிசலான கட்டங்கள். கட்டடங்களின் சுவர்களில் எல்லாம் Grafitti எழுத்தோவியம். ஒரு சீக் ஆலயம் தென்ப்பட்டது. ரயில் பாதை மிகவும் அழுக்காக இருந்தது. அழுக்கு நீர் தேங்கி, பிளாஸ்டிக் காகிதத்துடன் நின்றது. 

ரயிலுக்குள் பலவரியான விளம்பரங்களும் டிவியில் நியூஸ்ம் ஓடி கொண்டிருந்தது. உட்கார இடம் கிடைக்கவில்லை. இன்னொரு ரயில் மாற வேண்டும் Journal Square எனும் இடத்தில். அங்கிருந்து நியூ யார்க் சப் வே தொடங்கி விட்டது. கிரிச்சிடும் சப்தங்களுடன் ரயில் வேகமாக சென்றது. நியூ யார்க் நகரம் 33வது வீதியில் சென்று இறங்கினோம். படி ஏறி மேலே வந்து பரப்பான நியூ யார்க் சாலையில் நாங்களும் இனைந்து கொண்டோம்.

Monday, May 19, 2014

இணையத்தில் இருந்து புத்தகத்திற்கு பின்னகர்வு

சமிப காலமாய் புத்தக வாசிப்பு என்னிடத்தில் அதிகமாகி வருகிறது. அதை தொடர்ந்து டிவி, இணையம், மற்றும் இதர பொழுதுபோக்கு அம்சங்கள் மிக குறைந்துவிட்டன. ஒரு நாளைக்கு பேஸ்புக்கில் சராசரியாக மூன்று நிமிடத்திற்கு மேல் செலவழிப்பதில்லை. இது என் வாழ்வில் பெரிய திருப்பம், ஒரு போதையில் இருந்து வெளிவந்தாற் போல் உள்ளது. சாப்பிடும் போது மட்டும் டிவி ஓடும், ஆனால் சில சமயம் விரு விருப்பான் கதை நகர்வில் சிக்கி கொன்டு நேரம் கழிவதை தவிர்க்க முடியவில்லை. ஆனால் இணையத்தை குறைவாக உபயோகிப்பது ஒரு விடுதலை உனர்வை அளிக்கிறது.

நூலகம் என்று ஒரு கட்டிடம் எல்லா ஊர்களிளுமே இருக்குமென்றே நினைக்கிறேன்.  எந்த ஊருக்கு போனாலும் அந்த கட்டிடத்தினுள் பேருக்காவது ஒரு முறையேனும் காலேடுத்து வைக்கும் நிலை அமைந்துவிடும். ஆனால் இப்போது நூலகங்களை பெரும் அளவில் உபயோகித்து வருகிறேன். அதுவும் இந்த அமேரிக்க நூலகங்கள் பெரும் அளவில் புத்தகங்களை வைத்திருக்கின்றன, தமிழ் புத்தகங்களும் ஏராளமாக உள்ளது. அனைத்து புத்தகங்களையும் நூலகங்களின் இணைய தளத்தின் மூலம் தேட, இரவல் கேட்க, இரவல் நீட்டிக்க முடிகிறது. அதைவிட மேலாக பிற நூலகங்களில் இருந்து இரவல் வாங்கும் முறை. நான் இருக்கும் மாகானமான மிஷிகன் மாகானத்தில் இருக்கும் அனைத்து நூலகங்களும் கூட்டு சேர்ந்து எந்த நூலகத்தில் இருந்தும் இரவல் வாங்கலாம் என்றும் அதற்காக அருமையான இணைய தளம் ஒன்றையும் நிறுவி இருக்கிறது.

இணையத்தில் வாசிப்பதற்கும், புத்தகத்தில் வாசிப்பதற்கும் நிறையவே வித்தியாசம் தெரிகிறது. இணையத்தில் நாம் எளிதாக தேட முடிகிறது, ஆனால் அப்படி தேடும் போது நமக்கு கிடைப்பது தேடலுக்கு உன்டான கட்டளை முறையாலே(algorithms) தீர்மானிக்க படுகிறது. எப்படி அது தீர்மானிக்கிறது என்பதை பற்றிய ஆழந்த புரிதல் எனக்கு கிடையாது. ஆனாலும் அதனை தினமும் உபயோகிப்பவன் என்பதனால் அதை ஊகிக்க முடியும். நாம் தேடுவதற்கான இணையத்தில் இடும் சொற்களை வைத்தே நமக்கு தேடல் முடிவுகளை தருகிறது. இது தேடுவதற்கு ஒரு எளிய வழி தான், ஆனால் எந்த விதமான தேடலுக்கு? சென்னையில் டிவிஎஸ் டீலர் யார் என்று தெரிந்து கொள்ள இணையம் பெரும் உதவி புரியலாம், ஆனால் அத்வைதத்தை அறிந்து கொள்ள நினைக்கும் ஒருவர் போக வேன்டிய இடம் இணையம் அல்ல புத்தகம்.
புத்தகத்தில் எழுதப்படுவது அறிஞர்களாள், நிபுனர்களாள் எழுதப்படுகிறது அன்றி இணையத்தில் இருக்கும் கத்து குட்டிகளால், பக்கத்து வீட்டு மாமாக்களால் அல்ல. புத்தகத்தில் ஒரு முறை எழுதப்பட்டு பல முறை படித்து பார்த்து சரி செய்யப்பட்டு நமக்கு கிடைக்கிறது.  இணையத்தில் பெரும்பாலும் ஒருவரால் அந்த சமயத்தில் உடனுக்கு உடனே எழுதப்பட்டு வெளியிடப்படுகிறது. புத்தகத்தில் ஒரு விஷயத்தை நாம் விரைவாக கத்துகொள்ள முடியாது படி படியாக அதை சார்ந்த அனைத்து விஷயங்களையும் கற்று கொன்டே நாம் தேடும் விஷயத்தை தெரிந்து கொளவோம். அது நல்லது, நாம் தேடும் விஷயத்துக்கு மேலும், அதன் சம்பத்தபட்ட விஷயங்களையும் தெரிந்து கொள்கிறோம். இணையம் நமக்கு தேடும் விஷயத்தை மட்டும் எடுத்து தருகிறது அப்படி எடுத்து தரும் ஒரு கட்டுரையில் கூட நாம் ஒரு நாலு வரியை படித்து விட்டு அந்த விஷயத்தை அரை குறையாக தெரிந்து கொள்ளுகிறோம்.

புத்தகத்தில் நாம் படிக்கும் போது அதில் எனக்கு தேவையான விஷயங்களையே கையில ஏந்தி படிக்குறேன். ஆனால் இணையத்தில் நான் ஒரு விஷயத்தை படிக்கிறேன் என்றால், எனக்கு தேவையான விஷயம் அங்கு பத்து வரி தான் இருக்கிறது என்றால், அதை சுற்றி பத்து வகையான விளம்பரங்கள் இருக்கும். நான் எனக்கு வேண்டிய விஷயத்தை தரவிரக்கம் செய்யும் போது அந்த விளம்பரங்களையும் சேர்த்தே தரவிறக்கம் செய்கின்றேன். எனது தரவு ஒரு வினாடியில் தரவிறங்கும் என்றால், அந்த விளம்பரங்களுடன் சேர்ந்து தரவிரக்கம் செய்யும் போது அது பத்து விநாடியாக மாறுகிறது. அதே போல் எனது தரவு 50 Kilo bytes என்றால் அந்த விளம்பரத்துடன் சேர்ந்து அது 2 Mega bytes க்கு மேலே போக கூடும்.  இது தேவையில்லாத ஒரு பளு அதை புத்தகத்தின் மூலம் எளிதாக தவிர்த்து விடலாம். இங்கே விளம்பரத்தையே ஆதயமாக கொன்டு செயல்படும் கேளிக்கை பத்திரிக்கைளை பற்றி நான் பேசவில்லை. அதே போல் இணையத்தில் விளம்பரம் இல்லாமல் எல்லாம் கிடைக்க வேண்டும் என்றும் சொல்லவில்லை. அது வியாபரம். ஆனால் இலவசம் என்ற பெயரில் இந்த விளம்பரங்கள் நம் தலையிலை ஏற்ற படுவது தான் பிரச்சனை. இந்த இணையம் என்ற ஊடகம் வந்த பின் புத்தகம் என்ற ஊடகம் பழமையாகி விட்டது. ஒவ்வொரு மனிதனும் இணையத்தையே நாடும் எண்ணம் மேலோங்கி உள்ளது.அந்த மாற்றதிற்கு நாம் குடுக்கும் விலை இந்த விளம்பரங்கள் அள்ளி அள்ளி நமக்கு அளிக்கப்படுவது.

இந்த விளம்பரங்கள் அனைத்தும் 'பல் உருக்களினால்' (Hypertext) ஆக்கப்பட்டது. ஆகவே இவ்விளம்பரங்கள் பெரும்பாலும் நாம் படிக்க சென்ற விஷயத்தில் இருந்து திசை திருப்பி விடுகிறது. விளம்பரம் மட்டும் அல்ல, படிக்கும் விஷயங்களிலேயே அதில் இருக்கும் தொடர்புகளும், பக்கவாட்டில் தெரியும் பிற விஷயங்களும் நம்மை எளிதாக திசை திருப்பிவிடுகின்றன. நாம் படிக்க சென்ற விஷயத்தை பத்து நிமிடத்தில் படித்து முடிப்போம் என்றால் இந்த திசை திருப்பிகளால் நாம் மேலும் பல நிமிடங்கள் இணையத்தில் செலவிட நேர்கிறது. புத்தகத்தில் இந்த திசை திருப்பம் நடப்பதற்கு மிக குறைவாகவே சாத்தியங்கள் உண்டு. அதிக பட்சம் ஒரு சில வார்தைதைகளுக்கு அர்த்தம் பார்ப்போம். ஆனால் புத்தகத்தில் படிக்கும் விஷயங்களை உடனுக்குடன் கூகுல் செய்து பார்த்து கொன்டிருந்தால் கதை வேறு.

மேலும் நாம் புத்தகத்தை அனுகி அறிவை வளர்த்து கொள்வதால் நாம் என்ன தேடுகிறோம் என்று எவருக்கும் தெரிய போவதில்லை ஆனால் இணையத்தில் நாம் தேடும் ஒவ்வோரு விஷயமும் பதிவு செய்யப்படுகிறது. அதை கொன்டு நாம் யார் நமக்கு என்ன தேவை என்று நமக்கு விளம்பரம் தர உபயோகிக்கப்படுகிறது. இதன் மூலம் மக்களிடம் எளிதாக நுகர்வை தூன்டி விட முடிகிறது. எளிதாகவும் விரைவாகவுமான தேவைக்கு இணையம் கை கொடுக்கும். ஆனால் அப்படி ஒரு அவசரம் இல்லையெனில், புத்தகத்தை அனுகலாம். உதாரனம், இப்போது ஒரு புது ஊருக்கு சுற்றுலா போகபோகிறோம் என்றால், அதற்கு எப்படியும் ஒரு பத்து, இருபது நாட்களுக்கு முன்னே அதற்கான ஏற்பாடுகளை தொடங்கி விடுவோம். அந்த சமயத்தில் அந்த ஊரையும், அங்கு சுற்றி பார்க்க வேண்டிய இடங்களையும் இணையத்தில் தேடுவதற்கு பதிலாக, அந்த ஊரை பற்றிய ஒரு நல்ல புத்தகத்தை நூலகத்தில் எடுத்து படிப்பது ஒரு ஆழமான புரிதலை அடைய மிகவும் உதவும்.


இதெல்லாம் போக ஒவ்வருத்தருக்கும் பல தனிபட்ட வசதிகளையும் புத்தகங்கள் தரலாம். கண் எரிச்சலை தவிர்கலாம், குறிப்பாக கம்ப்யூட்டரிலேயே நாள் முழுதும் வேலை பார்பவர்களுக்கு. நடந்து கொன்டெ வாசிப்பவர்கள், மரத்தில் ஏறி வாசிப்பவர்கள் (வாய்ப்பிருந்தால் நான் செய்ய தயங்க மாட்டேன்), தனிமையாக பூங்காவில் வாசிப்பவர்கள், கழிப்பரையில் அறிவு வளர்போருக்கு என பல சாத்தியங்கள். நவின கைபேசிகளும், மின் பலகைகளும்(tablet) இதை ஒரளவுக்கு தர முடியும் ஆனால் அதற்கு மின்னூட்டமிட்டு தயாராக இருக்க வேண்டும். ஆனால் நமக்கு வேண்டும் சமயத்தில்தான் அவை அனைந்து போகும். எதில் தொடர்ந்து படித்தாலும் கழுத்தி வலி உன்டாவதை தவிர்க்க முடியவில்லை. ஆனாலும் அறிதலில் வரும் வலி பெரும் பொருட்டல்ல.

Thursday, May 8, 2014

இரு பறவைகள்




அடுக்காக அடுக்காக வாகனங்கள்,
நிமிடத்திற்கு பத்து பேர் உள்ளும் வெளியும் செல்கிறார்கள்,
அந்த பெருங்கடைக்குள்.

வாசனை திரவியம், ஆடை, அழகு சாதனங்கள்
மின்னனு உபகரனங்கள், தீனி, என இதர பல பொருட்களும்
அந்த பெருங்கடையில் விற்கிறார்கள்.

அழகு முகமூடியுடன் பெண்களும்,
போர்த்திய கம்பிரத்துடன் ஆண்களும்.
கையில் பொருட் பையும்,
முகத்தில் புன்னகையுடனும் நடந்து கொன்டிருக்கிறார்கள்.

வானில் அந்த இரு பறவைகள், பத்து நிமிடமாய்
ஒரே இடத்தில் சுற்றி சுற்றி பறந்து கொன்டிருக்கிறது.