Tuesday, May 27, 2014

நியூ யார்க் பயணக் கட்டுரை - 1

மெமோரியல் டே மே 26 அமெரிக்காவில் கொண்டாட படுவதால் அந்நாள் விடுமுறை. ஒரு வருடத்தில் மிக குறைந்த நாட்களே  தேசிய விடுமுறையாக US ல்  அனுசரிக்க படுகிறது. அதனால் இந்த விடுமுறையை வீணடிக்காமல் நியூ யார்க் நகரம் செல்ல முன்கூட்டியே நானும் மனைவியும் திட்டமிட்டுவிட்டோம். மே 21 கிளம்பி வழியில் ஓர் இரவு தங்கி விட்டு மொத்தம் ஐந்து நாட்களும் நியூ யார்க்கில் கழிக்க திட்டம். நியூ யார்க் நகரத்தில் தாங்கும் விடுதிகளின் வாடகை அதிகம் இருந்ததால் நியூ யார்க் நகர எல்லையில் இருக்கும் நியூ ஜெர்சியின் ஈஸ்ட் ஆரஞ்சு என்னும் இடத்தில் விடுதி முன்பதிவு செய்து விட்டோம்.


மே 21 2 மணி அளவில்  அலுவகத்தில் இருந்து சீக்கிரம் கிளம்பி வந்துவிட்டேன். மதியம் 2:30 மணிக்கு கிளம்பினோம். அமெரிக்கர்கள் அதிகம் விரும்பும் வெயில் கொளுத்தி கொண்டிருந்தது. முதல் பயணம் கிட்ட தட்ட 500 மைல்கள் கார் ஓட்டி கொண்டு செல்ல வேண்டும்.  பென்சில்வானியாவில் டேன்வில்லெவில் இரவு தங்கள். போகும் வழியை காரின் GPS காட்டிவிடும். கிளம்பி முக்கால் மணி நேரத்திலேய ஓஹயோ மாகாணத்தில் உள்ள டோலீடோ என்னும் நகரத்தை அடைந்தோம். அதை  அடையும் தோறும் வழி  எல்லாம் தொழிற்சாலைகள் பல இருந்ததை பார்த்தோம். இந்த டோலீடோ நகரம் நம் கோவை நகரத்துக்கு சிஸ்டர் சிட்டி ஆகும்.


மிசிகனில் நான் இருக்கும் இடத்தில இருந்து வெகு தூரத்திற்கு சென்றால் தான் விவசாய நிலங்களை  பார்க்க முடியும் ஆனால் ஓஹயோ மாகாணத்தில் டோலீடோ நகரத்தில் இருந்து சிறிது விலகியதுமே விவசாய நிலம் ஆரம்பித்து விட்டது.அது ஏன் என்று பிறகு திரும்பி வரும் போது  புரிந்தது. அலுவலகத்தில் உடன் வேலை செய்பவர்கள் சுங்க சாலைகளை தவிர்க்க சொன்னார்கள். அதன் பேரில் avoid tolls என்று GPSயை அமைத்து விட்டதால் அது சுங்கம் கட்ட வேண்டிய Freewayயை தவிர்த்து விட்டது அதனாலேயே அந்த விவசாய நிலங்கள் கண்ணில் பட்டது போலும்.  எந்த வவிவசாய நிலத்திலும் எதிவும் பயிர் செய்ய படவில்லை. பனி காலம் இப்போது தன் முடிந்துள்ளது. இனிமேல் தான் பயிரிடுவார்கள் என்று நினைகிறேன். எல்லா விவசாய நிலத்திலுமே பான் (Barn),  ஒரு உயரமான தோட்டத்து வீடு அமைக்க பட்டிருக்கும்.
பான்

ஓஹாயோ மாகாணத்தில் OH 2 எனும் பிரீவேயில் சென்றோம் ஈரி குளதின் கரையின் ஓரத்தில் அமைந்த வழி. டொலெடொவில் இருந்து 1 மணி  நேரத்திற்குள் கிளீவ்லன்ட் நகரத்திற்கு சென்றுவிட்டோம் அங்கு துறைமுகங்கள் இருந்தது. 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட டெட்ராய்ட் இருந்து கிளீவேலன்ட் வழியாக நியூ யார்க் சீல்லும் கப்பல் போக்கு வரத்து இருந்திருக்கிறது. இப்போது ஒவ்வொரு குடும்பத்திடமும் கார்கள் இருப்பதால் அது தேவை இல்லை.

US பிரீவேகளில் பயணம் செய்பவர்களின் வசதிக்காக சராசரியாக ஒவ்வொரு 30 - 40 மைல்களுக்கு ஒரு ஒய்வு வெளி - Rest area இருக்கும். கழிப்பறைகள், சிற்றுண்டி வாங்கும் எந்திரங்களும், மேப்பும், அருகமையில் உள்ள  சுற்றுலா தளங்களை பற்றிய விவரங்களும் இருக்கும். ஓஹாயோ மாகாணத்தில் சாலை குறியீடுகள் குழப்பகரமாக இருந்ததால் ஒரு  ஒய்வு வெளியை தவற விட்டு அடுத்த ஒய்வு வெளியை நெடு நேரம் காத்திருந்து பிடித்தோம்.

மாலை 6:30 மணி அளவில் வீட்டிலிருந்தே கட்டி வந்த சாப்பாட்டை சாப்பிட்டோம். சாப்பாட்டை கட்டி கொண்டு வந்து விடுவது காசு மிச்சம் செய்வதுமில்லாமல் ஹோட்டல் தேடி நிறுத்தும் நேரத்தையும் மிச்சம் செய்கிறது. சிறிது நேரத்தில் பென்சில்வினியா அடைந்து விட்டோம். நியூ யார்க் செல்வதற்கு பென்சில்வேனியாவை குறுக்காக கடந்தாக வேண்டும். பென்சில்வேனியா முழுக்க I80 என்ற பிரீவேயில் பயணம் செய்தோம் இரண்டே லேன்கள் கொண்ட சாலை. ஆங்காங்கே சாலை சீரமைப்பு பனி நடந்தமையால் வேகம் அளவு குறைக்க பட்டிருந்தது. 

மிசிகன் மாகாணத்தில் 70 மைல் தான் அதிக பட்ச வேகம். ஓஹயோ, பென்சில்வேனியா, நியூ ஜெர்செய்யில் அதிக பட்ச வேகம் 65 மைலாக இருந்தது. போகும் போதே முடிவு செய்துவிட்டேன் வேக அளவை மீற கூடாதென்று.

பென்சில்வேனியா சாலையின் இரு புறமும் அடர்ந்த காடாக இருந்தது. அடர் பச்சை நிற மரங்கள். ஒரே மாதிரியான மரங்கள். மேடு பள்ளமாக மர வெளி. மர பரப்புக்கு கிழே மலை ஒளிந்திருந்தது. மலைகளுக்கு வகுடு எடுத்து சீவி விட்டது போல் மரங்கள் ஒரே உயரத்தில் சீராக பரவலாக அமைந்திருந்தது. அங்கங்கே பணி படலம்  mist சாலையின் காட்சியை குறைத்தது. வழி நெடுக ஆங்கங்கே மான்கள் வண்டிகளில் அடிபட்டு செத்துக்கிடந்தது. இரவு தொடங்கி விட்டுருந்த்தல் ட்ரக்குகள் சாலையில் அதிகம் இருந்தது.  

போகும் வழியில் கடைகள், வீடுகள், விவசாய நிலங்கள், எதுவுமே தென் படவில்லை. ஏதோ காட்டுக்குள் சாலை போட்டிருப்பார்கள் போலும். ஆனால் 30 மைலுக்கு ஒரு ஒய்வு வெளி இருந்தது. 10 மணிக்கு மேல் சாப்பாடு வாங்கி கொண்டு தங்கும் விடுதிக்கு சென்று விடலாம் என்று இருந்தோம். என் மனைவி ஷாலினி எச்சரித்தது போலவே 10 மணிக்கு மேல் நாங்கள் செல்லும் வழியில் எந்த கடைகளுமே இல்லை. அப்படியே இருந்தாலும், சைவ உணவு கடைகளாக இல்லை. இரவு 11:30 மணிக்கு விடுதிக்கு சென்று சேர்ந்தோம். எந்த உணவகமும் அந்த நேரத்தில் திறந்திருகாது. அந்த நேரத்தில் திறந்து இருக்கும் Drive through உணவு கடைகளும் அருகில் ஏதும் இருக்கவில்லை. அதனால் அருகில் இருக்கும் Walmart சென்று கேக், நொறுக்கு தீனி, வாழை பழம் வாங்கி வந்து சாப்பிடுவிட்டு தூங்கினோம். அவ்வளவு பசி இல்லாததால் அது போதுமாக இருந்தது.


நல்ல வேலையாக நாங்கள் விடுதி  வந்து சேரும் வரை மழையேதும் இல்லை. விடுதி வந்து டிவியில் பார்த்தால் அந்த இடத்திற்கு storm warning அறிவுதிருந்தர்கள். இரவு நல்ல மழை பெய்தது. மே 22 காலை பத்து மணி அளவில் கிளம்பினோம் இன்னும் இரண்டரை  மணி நேர பயணம். பென்சில்வேனியாவின் மிச்ச தூரத்தையும் கடந்து நியூ ஜெர்செயின் கிழக்கு எல்லைக்கு சென்றாக வேண்டும். நியூ ஜெர்சி மாகானமும் மலைகளாக இருந்தது அனால் வெவ்வேறு பச்சை நிறத்தில் மரங்கள் சிறிதும் பெரிதுமாக தோன்றியது. பென்சில்வேனியாவிழும், நியூ ஜெர்செயிலும், சில மலை சரிவுகளில் Falling Rocks என்ற குறி இருந்தது. நியூ ஜெர்செர்யில் சில மலை  சரிவுகளை கம்பி வலையில்ட்டு போர்த்தி இருந்தார்கள். நியூ யார்க் நகரை நெருங்கும் வரை நியூ ஜெர்செய்யும் அமைதியான சாலையுடன் இருந்தது. அதே I80 பிரீவேயில் தான் சென்றோம் நியூ யார்க் அருகே சென்றதும் I280 என்ற ப்ரீவே தொடங்கியது. பரப்பான போக்குவரத்து தொடங்கியது நான்கு லேன் சாலையாக மாறியது.

நியூ யோர்கையும், நியூ ஜெர்செய்யையும் பிரிப்பது ஹட்சன் என்ற நதி. நியூ ஜெர்சியின் கிழக்கு எல்லையில் இருந்து நியூ யார்க்குக்கு நகரத்திற்கு ஒரு துரித ரயில் போக்குவரத்து PATH இருக்கிறது. 15 நிமிடத்திற்கு ஒரு வண்டி என 24 மணி நேரமும்  இருக்கிறது. நாங்கள் தாங்கும் விடுதி இருக்கும் ஈஸ்ட் ஆரஞ்சுக்கு பக்கம் ஹாரிசன் என்னும் இடத்தில இருந்து நியூ யார்க் 33வது வீதி வரைக்கும் அந்த ரயில் செல்லும். அதனால் நேராக ஹாரிசன் ரயில் நிலையத்திற்கே சென்று விட்டோம்.


நியூ ஜெர்சி ஹாரிசன் நகரத்தில் பிரீவேயில் இருந்து நகரத்திற்குள் நுழைந்தோம். காரை நிறுத்த பார்கிங் கண்டு பிடித்தாக வேண்டும். மிசிகன் மாகாண சாலை விதிக்கும் நியூ ஜெர்சி சாலை விதிக்கும் ஒன்று பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் சாலைகளில் நெரிசல் அதிகம், புது இடம், சாலையில் பூசபட்டிருக்கும் வெள்ளை, மஞ்சள் கோடுகள் எல்லாம் அழிந்திருந்தது அதனால் காருக்கு பார்கிங் கண்டு பிடிப்பது பெரும் பாடாக  ஆகிவிட்டது. பார்கிங் ஸ்டேஷன் முகவரி எதுவும் எடுத்து வராததால் தேடவேண்டியதாகி விட்டது.
புது இடம் என்பதால் ஒன் வேயில் நுழைந்து விட கூடாது, அபராத டிக்கெட் வாங்கிவிட கூடாது என்பதால் மெதுவாக தேடி கொண்டே சென்றோம். கடுப்பான உள்ளூர் வாசிகள் ஹாரன் அடித்தார்கள். அவ்வாறு ஹாரன் அடிப்பது ஒருவரை திட்டுவதற்கு சமம் ஆனால் பெரு நகரங்களில் அது சாதாரணம். எப்படியோ ஒரு வழியாக பார்கிங் கண்டு பிடித்து காரை நிறுத்தி விட்டு ரயில் ஸ்டேஷன்க்குள் நுழைந்தோம்.

இதை போன்ற நகர ரயில்கள் எல்லாம் ஒரு காசு அட்டையை தந்து விடுகிறார்கள் முன்னமே ஒரு 5 பயன்களுக்கான பணத்தை கொடுத்து அந்த அட்டையை பெற்று கொள்ள வேண்டும் பின்பு தேவை பட்ட ஸ்டேஷனில் swipe செய்து பயணம் செய்து கொள்ளலாம். அதை விநியோகிக்க ஒரு தானியங்கி எந்திரம்.
ரயில் ஸ்டேஷன் இரும்பு வாடையுடன் இருந்தது. ஹாரிசன் நகர சாலைகளும் அதிக தூசு படிந்து தான் இருந்தது. அந்த நகரத்தில் சிறிது சிறிதாய் நெருக்கமான வீடுகள். சாலையின் இரு ஓரங்களிலும் அவர்களுக்கான சாலைகள். அங்கு இந்தியர்கள் தான் அதிகமாக தென்ப்பட்டார்கள். அது ஒரு residental area. நியூ யோர்கில் பனி புரியும் அணைத்து நடுத்தர வர்க்க குடும்பங்களும் இது போன்ற எல்லையில் உள்ள நகரங்களில் வசிக்கிறது போலும் .

ஸ்டேஷனில் வெள்ளையர்கள் மிக குறைவாக தான் இருந்தார்கள். இந்தியர்கள், சீனர்கள், லத்தின் அமெரிகர்கள், கருப்பர்கள் தான் அதிகம் இருந்தார்கள். ரயில் வந்தது. ஹட்சன் ஆற்றை கடந்தோம். பெரும் பாலம் ஒன்று தெரிந்தது, சாலையாக இருக்க வேண்டும் நிறைய கண்டேய்னர்கல் இருந்தது. துறைமுக நகரமல்லவா. பாலைடந்த வீடுகள் சில. நெரிசலான கட்டங்கள். கட்டடங்களின் சுவர்களில் எல்லாம் Grafitti எழுத்தோவியம். ஒரு சீக் ஆலயம் தென்ப்பட்டது. ரயில் பாதை மிகவும் அழுக்காக இருந்தது. அழுக்கு நீர் தேங்கி, பிளாஸ்டிக் காகிதத்துடன் நின்றது. 

ரயிலுக்குள் பலவரியான விளம்பரங்களும் டிவியில் நியூஸ்ம் ஓடி கொண்டிருந்தது. உட்கார இடம் கிடைக்கவில்லை. இன்னொரு ரயில் மாற வேண்டும் Journal Square எனும் இடத்தில். அங்கிருந்து நியூ யார்க் சப் வே தொடங்கி விட்டது. கிரிச்சிடும் சப்தங்களுடன் ரயில் வேகமாக சென்றது. நியூ யார்க் நகரம் 33வது வீதியில் சென்று இறங்கினோம். படி ஏறி மேலே வந்து பரப்பான நியூ யார்க் சாலையில் நாங்களும் இனைந்து கொண்டோம்.

3 comments:

  1. acquired many things about USA town.city and villages. especially the inhabitants of those areas.very good way of expressing the experiences.thank u. balu/coimbatore

    ReplyDelete
  2. acquired many things about USA town.city and villages. especially the inhabitants of those areas.very good way of expressing the experiences.thank u. balu/coimbatore

    ReplyDelete