Sunday, June 1, 2014

நியூ யார்க் பயணக் கட்டுரை - 5

மே 24 அன்று லிபர்டி ஸ்டாட்சுவிற்கு செல்ல முடிவு செய்திருந்தோம். மதியம் ஒரு மணி அளவில் நியூ யார்க்கிற்கு ரயிலில் சென்றோம். அங்கிருந்து பேட்டரி பார்க் என்ற இடத்தில் இருந்த்து படகின் மூலம் லிபர்ட்டி சிலைக்கு செல்ல வேண்டுமாம். மேப்பை பார்த்து பேட்டரி பார்க்கிற்கு நடப்பதற்காக ஒரிடத்தில் இறங்கி கொன்டோம். ஆனால் அது தவறான இடம். அங்கிருந்து ஃபெர்ரி படகு ஏற்றதிற்கு வெகு தொலைவு நடந்தாக வேண்டும். அதனால் ஒரு டாக்ஸியில் செல்வது என்று, ஒரு டாக்ஸியில் ஏறினோம். இந்திய முகத்துடன் ட்ரைவர். பாக்கிஸ்தானியாக கூட இருந்திருக்கலாம். நியூ யார்க்கின் டாக்ஸிகளில் பெரும்பான்மையாக இந்திய, பாக்கிஸ்தான், பங்கலாதேஷ் காரர்கள்தான் ஓட்டுகிறார்கள். 9 டாலர் ஆனது, 10 டாலராய் குடுத்துவிட்டு இறங்கினோம்.

அங்கே ஒரு காபி குடித்துவிட்டு லிபர்டி ஸ்டாட்சுவிற்கு டிக்கட் வாங்கும் இடத்தை காண சென்றோம். மேப்பில் துள்ளியமாக இடத்தை பார்த்துவிட்டு வராததனால் இடத்தை கண்டுபிடிப்பது சிரமமாகி விட்டது. ஏனென்றால் அங்கு ஏகப்பட்ட படகு தளங்கள். அங்கு சுற்றுலா பயணிகளுக்கு சரியாக வழிகாட்டும் வகையில் வழிகாட்டும் பலகைகள் இல்லை. டிக்கட் கவுண்டருக்கு ஒரு பெரிய வரிசை நின்று கொன்டு இருந்தது. நாங்கள் நியூ யார்க் பாஸ் வைத்து இருந்ததால் எங்களுக்கு அந்த வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. சீக்கிரமே டிக்கட் வாங்கி கொன்டு வெளியே வந்தோம் அங்கு அதைவிட பெரிய வரிசை. அதில் சென்று நின்றோம். இங்கு நியூ யார்க் பாஸால் வரிசையை தவிர்க்க முடியாது. ஆனால் அந்த பாஸின் விளம்பரங்களில் எந்த க்யூவிலும் நிற்க தேவையில்லை என்பது போல தான் எழுதியிருந்தார்கள்.

ஒரு அரைமணி நேரம் நின்று இருப்போம். நிறைய இந்தியர்களும் க்யூவில் இருந்தார்கள். முதியவர்கள், குழந்தைகளுடன் வந்திருந்தார்கள். குழந்தைகள் ப்ராமில் இருந்ததால் எந்த கவலையும் இல்லாமல் எல்லாரையும் வேடிக்கை பார்த்து கொன்டிருந்தது. அந்த நேரத்தில் குழந்தைகள் மேல் ஒரு பொறாமை வந்தது. ஒரு வயதான கருப்பர் நின்று கிடார் வாசித்து பாடி கொன்டு இருந்தார். எல்லாருக்கும் வாழ்த்து சொல்லி கின்டல் செய்து மகிழ்ச்சியாய் இருந்தார். அவருடைய டப்பாவில் சிலர் காசு போட்டனர். உள்ளே சென்றோம். பாதுகாப்பு பரிசோதனை செய்தார்கள். ஏறகுறைய எல்லா இடங்களிலுமே விமான நிலையத்தில் செய்வது போல பாதுகாப்பு சோதனை செய்தார்கள். ஃபெர்ரி படகு வந்து நின்றது. அதில் ஏறி கொன்டோம்.

மூன்று அடுக்கு கொன்ட படகு அது. எல்லாரும் ஏறியவுடன் மேல் தளத்திற்கும், ஜன்னலுக்கும் தான் வேகமாக சென்றார்கள். நாங்கள் மேல் தளத்திற்கு சென்றோம். ஒரங்களில் எல்லாம் அடைத்து நின்று கொன்டு புகைபடம் எடுக்க தொடங்கினார்கள். இந்தியர்களும், சீனர்களும் இடம் பிடிப்பதில் வள்ளுனர்களாக இருக்கிறார்கள். அது புரிந்து கொள்ள கூடியதே. நகரத்தின் உயர்ந்த கட்டங்களையே பார்த்து கொன்டு வந்த கூட்டம் சட்டென்று மறு திசைக்கு திரும்பியது. லிபர்டி சிலை பிரம்மான்டமாய் தெரிய துவங்கியது. பச்சை நிறமான பிரம்மான்டமான சிலை. இந்த 'வாய்ப்பு தரும் தேசத்தை' நோக்கி வருவபவர்களுக்கு கலங்கரை விளக்கம் போல் கைதூக்கி அழைக்கும் சின்னம். இந்த ஐக்கிய மாநாட்டின் பெருமிதத்தை பறை சாற்றும் ஒரு அடையாளம்.

படகிலிருந்த எல்லா கைகளும் அதை கேமராவில் பதிவு செய்து கொன்டுருந்தது. உலகிலேயே அதிகம் புகைபடம் எடுக்கப்பட்ட இடங்களை பட்டியலிட்டால் இந்த சிலை அதில் மிகவும் மேலே இடம் பிடிக்கும். எங்களது படகு அந்த சிலையை மெதுவாய் வலம் வந்து கரையை சென்று தொட்டது.இறங்கி நடத்தோம். வாயிலில் அனைவருக்கும் ஆடியோ டுர் என்று ஒரு பதிவு செய்யப்பட்ட ஒலி வழிகாட்டியை கையில் கொடுத்துவிடுகிறார்கள். ஆனால் அது அவ்வளவு உபயோகமாக இல்லை. கண்னுக்கு முன் அவ்வளவு பிரம்மான்டமாக இருக்கும் காட்சிக்கு முன்னால் அந்த ஒலியில் கவனம் செலுத்த முடியவில்லை. அப்படியே சிலையின் பின் புறத்திலிருந்து முன்புறத்திற்கு நடந்தோம்.

சிறப்பு கட்டனத்தின் பேரில் லிபர்டி சிலையின் உள்ளே சென்று பாதத்தையும், கிரிடத்தைநும் பார்க்க அனுமதிக்கிறார்கள். ஆனால் அந்த டிக்கட்டுகள் முன் பதிவு செய்து வர வேண்டும், அதுவம் அது பல மாதங்களுக்கு முன்பாகவே விற்று தீர்ந்து விடுமாம். அதனால் வெளியே தான் சுற்றி பார்த்தோம். லிபர்டி சிலை மன்ஹாட்டான் நகரத்திற்கும் நியூ ஜெர்சிக்கும் நடுவில் ஒரு சிறு தீவில் இருக்கிறது. தீவின் விளிம்புகளில் அலைகள் வேகமாக அடித்து தெரித்து கொன்டு இருந்தது. சீகல் பறவை பறந்து கொன்டு இருந்தது. சிலையை சுற்றி தீவின் விளிம்பில் ஒரு அகல நடைபாதை இருந்தது. நல்ல காட்சி கிடைக்கும் இடத்தில் எல்லாம் நின்று புகைபடம் எடுத்து கொன்டர்கள். ஜோடியாக, குடும்பத்துடன் வந்தவர்கள் எல்லாரும் அடுத்தவர்களிடம் கேமராவை குடுத்து குடும்ப புகைபடம் எடுத்து கொன்டனர். நானும் சில பேருக்கு எடுத்து தந்தேன். எனக்கு கேமரா தந்தவர்கள் எல்லாரும் ஒரே மாதிரியான கேமரா தான் தந்தார்கள் கருப்பு நிற கெனான் எஸ் எல் ஆர் கேமரா. எஸ் எல் ஆர் கேமரா, புகைபட வல்லுனர்களுக்கான கேமரா என்பது மாறி வெகு ஜன கேமராவாகிவிட்டது. நாங்களும் பல புகை படங்கள் எடுத்து கொன்டோம்.


ஒருவர் கூட அந்த சிலையை ஒரு நிமிடம் கூட கவனிக்கவில்லை. புகைபட்டதில் தான் முழு கவனமும். அந்த சிலையின் முன் குதிப்பது போல், சிலையின் தலையை பிடித்து தூக்குவது போல, சிலைக்கு மூக்கு நோன்டி விடுவது போல என்று ஆயிரம் நிலைகளில் எடுத்து கொன்டனர். அந்த சிலையை அதைவிட உயரமான ஒரு கல் மேடையில் நிறுவி இருந்தார்கள். சிலை உலோகத்தால் ஆனாது கடல் காற்றினால் பச்சையாக ஆகியிருக்கிருக்கிறது. அதனை கையில் ஒங்கி இருக்கும் பந்தத்தில் சுவாலை மட்டும் தங்க நிறத்தில் இருந்தது. உடல் முழுவதும் நிறைய துணிகளை சுற்றி இருந்தது. வயதான ஆனால் திடமானான அன்னை போல் இருந்தது. சிலையின் கைகள் பருமனாக இருந்தது. முகம் இருகி பட்டையாக இருந்தது. அந்த சிலையின் உச்சியில் எந்த பறவையுமே பறக்கவில்லை. எதிர்பாராத வண்ணம் ஒரு ஐந்து ரானுவ எலிகாப்டர்கள் தீவை ஒட்டி பறந்து சென்றது.

ஐக்கிய மாகானத்திற்காக பிரான்ஸ் அன்பளிப்பாக தந்தது அந்த சிலை. பிரம்மான்டமான இந்த சிலை பல பாகங்களாய் பிரிக்கப்பட்டு கப்பலில் 1886ல் நியூ யார்க் வந்து சேர்ந்தது. அந்த சிலையை ஒன்றாக பொருத்தி நிறுவி இருக்கிறார்கள். சிலையின் உயரம் மட்டும் 151 அடி, அது தரையில் 300 அடி இருக்கும் வகையில் கல் மேடை அமர்த்தி நிறுவி இருக்கிறார்கள். இந்த சிலையின் முகம் அந்த சிற்பத்தை வடித்தவரின் அன்னையின் முக சாயல் கொன்டது. இந்த சிலை சுதந்திரத்தற்கான ரோம பெண் கடவுளான லிபர்டாவை குறிக்கிறது.

அப்படியே வந்த வழியே திரும்பி ஒரு சுற்று வந்து படகில் ஏறினோம். இந்த டிக்கட்டிலேயே அருகில் இருக்கும் எல்லிஸ் தீவிற்கும் அனுமதி உண்டு. அங்கே ஒரு அருங்காட்சியகம் உள்ளது. அங்கு செல்வதும் படகில் தான். 20 நிமிடம் வரிசையில் நின்று படகில் ஏறினோம். படகு சவாரி, லிபர்டி சிலை, அருங்காட்சியகம் எல்லாவற்றிர்க்கும் சேர்த்து 14 டாலர் தான் டிக்கட் என்பது மிக குறைவு தான்.

எல்லிஸ் தீவில் தான் கப்பல் வழியாக வருபவர்களுக்கு குடியேற்றம் நடந்திருக்கிறது. இப்போது அதே கட்டிடத்தை சீரமைத்து அருங்காட்சியகம் ஆக்கி இருக்கிறார்கள். 1875 - 1925 வரையிலுமான கால கட்டதில் அதிகமான குடியேற்றம் இங்கு நடந்திருக்கிறது. அந்த மக்கள் எப்படி பரிசோதனை செய்யபட்டனர், எப்படி குடியேற்றதிற்கு தேர்வு செய்யப்பட்டனர், நிராகரிக்க பட்டவர்கள் என்ன செய்தார்கள், தற்காலிகமாக நிறுத்தி வைக்கபட்டவர்கள் என்ன ஆனார்கள். அனுமதிக்கப்பட்டவர்களுக்கு என்ன சேவை தரப்பட்டது. எவ்வளவு நபர்கள் ஒரு நாளைக்கு குடியேற்றதிர்க்காக காத்திருப்பார்கள். அவர்களின் உடமைகள் எப்படி அவர்களுக்கு கொன்டு சேர்க்கப்பட்டது என்று விளக்கமாக காட்சி படுத்தி இருந்தார்கள்.

இது போக  அமெரிக்கவை தேடி மக்கள் ஏன் வந்தார்கள். எந்த நாட்டில் இருந்து மக்கள் எந்தேந்த காலகட்டதில் இருந்து வந்தார்கள். வந்து அவர்களுக்கு இங்கு என்னன்ன கஷ்டங்கள் ஏற்பட்டது. அவர்கள் அமேரிக்காவிற்கு எப்படி பங்களித்தார்கள், அவர்களை அந்நாட்டு மக்கள் எப்படி எதிர் கொன்டார்கள் என பலவகையான விபரங்கள் இருந்தது.எனக்கு மிகவும் ஆர்வமிக்கதாக இருந்தது அங்கு கிடைத்த தரவுகள். என்ன தான் புத்தகம், இனையம் இருந்தாளும், ஒரு அருங்காட்சியகத்திற்கு செல்லும் போது அங்கு மாதிரியுடன் நமக்கு கிடைக்கும் தகவல்கள் கண்டிப்பாக படிக்கும் வண்ணம் உபயோகமாக இருக்கிறது. அருங்காட்சியகத்திலேயே அரை மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு டாக்குமென்றி படம் கான்பிக்கபடுகிறது, ஐலேன்ட் ஆ்ஃப் ஹோப், ஜலேன்ட் ஆஃப் டியர்ஸ் என்று அந்த தீவினை பற்றிய டாக்குமென்டரி.


அமேரிக்கா நோக்கி மக்கள் வர ஆரம்பித்தற்கு முக்கியமான காரனங்கள் சிலவே இருந்திருக்கிறது. முதலாவதாக, மதம். ஐரோப்பாவில் ரோமன் கத்தோலிக்க சபைக்கு எதிராக பதினாராம் நூற்றான்டில் உருவான சில சபைகள். அவைகளை மொத்தமாக ப்ரோட்டஸ்டான்ட் கிறித்துவர்கள் எனப்படுவர். அவர்கள் கத்தோலிக்க சபையால் ஒடுக்கப்பட்டதின் காரனமாக இந்த புது தேசத்திற்கு பயனம் செய்திருக்கிறார்கள். தூய்மைவதிகள், ப்ரெஸிபிட்டேரியன்கள், லூத்தரன்கள் என பல்வேறு கிறித்துவ பிரிவுகளும் இங்கு வந்திருக்கிறது. இரான்டாவது, தொழில் அதிபர்கள், அமேரிக்காவின் பரந்த நில பகுதியும் அதன் வளங்களும் ஒரு தங்க சுரங்கம் போல் மக்களை ஈர்த்திருக்கிறது. புகையிலை ஆரம்ப காலத்தில் மிகவும் லாபகரமான தொழிலாக இருந்திருக்கிறது. மூன்றாவது காரனம், தொழில் புரட்சி, ஐரோப்பாவின் நவின கண்டுபிடிப்புகளும் அதனால் உன்டான தொழிற்சாலைகளும் விவசாயிகளை ஓரம் கட்டிவிட்டது. அதனால் பிழைப்புக்காக பல பேர் இங்கு ஓடி வந்திருக்கிறார்கள்.

உருளை கிழங்கு பஞ்சத்தால் ஐரிஷ் மக்களும், ஜன தொகை நெருக்கடியால் சீனர்களும் வந்திருக்கிறார்கள். இத்தாலியர்கள், கத்தோலிக்கர்கள், யூத மக்கள் எல்லாம் கடைசியாக தான் வந்திருக்கிறார்கள். இந்திய மக்களின் குடியேற்றத்தை பற்றி எந்த தகவலும் இல்லை. ஒரு வேலை தனி தனியாக அல்லது சிறு கூட்டங்கலாக குடியேரி இருப்பின் குறிப்பிடும் படியாக இருந்திருக்காது.

அருங்காட்சியகத்தில் மூன்று தளங்கள் இருந்தது, சுற்றி பார்க்க பார்க்க கால் வலி தாங்க முடியவில்லை. பார்த்து வெளியே வந்தால் மழை பெய்து கொன்டு இருந்தது. ஒரு படகு நிரம்பி மக்கள் போக நாங்கள் அடுத்த படகில் காத்திருந்து ஏறி கொன்டோம். மழையினால் மக்கள் படகில் கூரைக்கு அடியில் அடைத்து நின்று கொன்டு வந்தார்கள். படகில் இருந்து இறங்கும் போது மழை ஓய்ந்திருந்தது.  வெளி செல்லும் வழியில், ப்ளாஸ்டிக் டப்பாவை கவுத்தி போட்டு ஒரு கருப்பு இளைஞன் வாசித்து கொன்டு இருந்தான். கேரிகேட்சர் ஒவியங்கள் வரைபவர்கள் ஒரு இந்திய ஜோடியை வரைந்து கொன்டு இருந்தான். வயிறு தன் இருப்பை உனர்த்தியது சப் வே உணவகத்திற்கு சென்று வெஜி சப் சாப்பிட்டோம்.

No comments:

Post a Comment