Saturday, March 22, 2014

ஃபேஸ்புக் - அறியாத பக்கங்கள் - 2

நுகர்வு
ஃபேஸ்புக் போன்ற தளங்கள் அனைவருக்கும் ஒரு மேடை அமைத்து தருகிறது. சில நூறு பேர் பார்க்கும் மேடை, கிட்டதட்ட ஒரு சினிமா தியேட்டர் அளவுக்கு பார்வையாளர்கள். இந்த காரனத்தாலேயே ஒவ்வொருவரும் அவர்களை காட்சி பொருள்களாக கருதுகிறார்கள். அவர்கள் அங்கு பகிரும் விஷயமும் கவனிக்கபடுகிறது என்ற ப்ரக்ஞை அனைவருக்கும் இருக்கிறது, ஒரு புகைப்படம் ஃபேஸ்புக்கில் ஏற்றப்படுகிறது என்றால் அதன் மூலம் அவரது பிம்பம் வெளிகாட்டப்படுகிறது. அதன் மூலமே அந்நபரின் பொருளாதார நிலை, நவநாகரீகத்தின் அறிவு என பல வகையான தரம் பாரக்க படுகிறது. விளைவு, இதற்க்காகவே இந்த ஆடம்பர பொருட்கள் அதிக அளவில் வாங்கப்படுகிறது. பல ஆடம்பர பொருட்கள் இன்று மிக அத்யாவசியம் என்றாகிவிட்டது. வாகனங்கள், மின்னனு உபகரனங்கள் என்று எத்தனையோ விஷயங்கள் வாங்கபட்ட உடனே புகைப்படத்துடன் பகிரப்படுகிறது. சுற்றுலா புகைப்படங்கள் என பல கொன்டு வந்து கொட்டப்படுகிறது. இப்படி பல விஷயங்களில் கவர்ச்சிக்காவே இந்த ஃபேஸ்புக் பயனர்கள் நேரம் செலவிடுகிறார்கள். இப்படியே அனைவரும் செலவிட்டால் ஒரு சமுதாயத்தின் அறிவு எப்படி வளரும்? எப்படி மாற்றம் பெரும்? பெரும் வருத்ததிற்க்குரிய விஷயம் இது. இப்படி பலரும் தங்களின் பொருளாதார வளர்ச்சியையும், வல்லமையையும் பறை சாற்றவே புகைப்படங்களை காட்சியாக்குகிறார்கள். இதனால் அந்த பொருள் அத்யாவசியமில்லாதவரும் அதை வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதறக்காக பெருமுயர்ச்சியுடன் வாங்கவும் செய்கிறார்கள். இதனால் நுகர்வு ஏகமாக பெறுகிறது. நுகரப்படும் பொருள்களுக்கு மக்களே மேலும் விளம்பரம் செய்கிறார்கள். நிறுவனங்கள் இதனால் பெருமளவு லாபம் ஈட்ட முடிகிறது.

இலவச சேவை
உலகளாவிய அளவில் பல பேர், பல மணி நேரம் உபயோகிக்கும் ஃபேஸ்புக் எதற்க்காக அதன் சேவையை இலவசமாக மக்களுக்கு அளிக்கிறது? ஃபேஸ்புக் மட்டுமல்ல மின்னஞ்சல், இனைய தேடல் என பல நிறுவனங்கள் எதற்க்காக இச்சேவைகளை நமக்கு இலவசமாக அளிக்க வேண்டும்? இரு முக்கியமான காரனங்கள்.

1. விளம்பர மேடை
இப்படிப்பட்ட இனைய தளங்கள் தம்மை விளம்பரத்துக்கான ஒரு மேடையாய் உபயோகித்து கொள்கிறது. இந்த மேடையை நோக்கி நம்மை இழுப்பதற்க்காக தான் இந்த இலவச சேவை. கூகுலின் பிரதான சேவை - இனைய தேடல். கூகுல் இதர பல சேவைகளையும் தருகிறது, அதில் ஒரு இனைய தளமான யூட்யப் - மக்களுக்கு வீடியோக்களை சேமித்து பகிரும் சேவையை அளிக்கிறது. அதே போல் தான் ஃபேஸ்புக்கும், நன்பர்களை இனைத்து, அவர்கள் அங்கு இடும் புகைப்படம், வீடியோ, ஸ்டேடஸ் போன்ற பல விதமான காட்சி பொருட்களை காட்சிப்படுத்துகிறது. மக்கள் அதிக நேரம் செலவிடும் இந்த நவின ஊடகங்கள் மக்களிடமிருந்தே காட்சி பொருட்களை பெற்று காட்சிப்படுத்துகிறது, இந்த முறை இதற்கு முன்னாள் இருந்த ஊடகங்களை இருந்து வித்தியாசமானது. தொலைக்காட்சி, பத்திரிக்கை ரேடியோ போன்றவை நிகழ்ச்சிகள், செய்திகள், கட்டுரைகளை நிபுனர்களினால் தயாரித்து வெளியிடும். அந்த படைப்புகளுக்கு நடுவே விளம்பரங்கள் சேர்க்கப்படும்.ஆனால் இந்த இனைய ஊடகங்கள், மக்களால் தயாரிக்கப்பட்ட படைப்புகளை கொன்டே மக்களை ஈர்க்கிறது. அந்த  படைப்புகளுக்கிடையே விளம்பரங்களை சேர்க்கிறது. இந்த விளம்பரங்களால் அவை பெரும் வருமானம் ஈட்டுகிறது. இதில் கவனிக்க வேண்டியது படைப்புகளை உருவாக்கும் செலவு இந்த ஊடகங்களுக்கு அரவே இல்லை. ஆனால் யூட்யுப் போன்ற தளங்கள் விளம்பரங்களில் ஒரு பங்கை அந்த வீடியோக்களை உருவாக்கியவருக்கு தருகிறது. ஆனால் இதுவும் மிக சிறிய தொகையாகவே இருக்கும் என்றே நினைக்கிறேன்.

2. ஒட்டு கேட்பதும், நோட்டம் பார்ப்பதும்
இந்த இலவச சேவைகளில் பல, உதாரனத்திற்கு மின்னஞ்சல், க்ளவ்ட் ஸ்டோரேஜ் போன்ற பல சேவைகளில் நாம் நமது சுய தரவுகளையே கொன்டு சேமிக்கிறோம். இந்த தகவல்கள் அங்கு சேமித்து மட்டும் வைக்கப்படுவதில்லை. அதை டேடா மைனிங்(Data mining) என்ற முறையில் அதில் இருந்து நம்மை பற்றி பல நுண்தகவல்கள் உறிஞ்சப்படுகிறது. அதாவது நமது மின்னஞ்சல்களில் இருக்கும் வார்த்தைகளை மென்பொருளின் மூலம் ஆராய்ந்து நம்மை பற்றிய தகவல்களை வைத்து நம் ஒவ்வொருவருக்கும் எப்படியான விளம்பரங்கள் தரலாம் என்று முடிவு செய்யப்படுகிறது.  உதாரனத்திற்கு, நான் நாய் வளர்ப்பவன் என்று கண்டு பிடிக்கப்பட்டால் நாய் வளர்ப்புக்கு ஏற்றார் போல் விளம்பரங்கள் காட்டப்படும், நீங்கள் மானவர் என்று தெரிந்தால் அதற்கு ஏற்றார் போல் விளம்பரம் காட்டப்படும். இதனால் விளம்பரங்கள் இன்னும் கூர்மையைடைகின்றன. ஒவ்வருக்கும் மிகவும் சம்பந்தப்பட்ட விஷயங்களை வைத்தே விளம்பரங்கள் காட்டப்படுவதினால் குறைந்த அல்லது குறிப்பட்ட சாரார்க்கு விளம்பரங்களை அதிக முறை காட்டலாம். இதனால் அவர் அந்த பொருளை வாங்குவதின் வாய்ப்புகள் அதிகம். இப்படிப்பட்ட விளம்பரங்கள் முந்தய ஊடகங்களின் விளம்பர  அறிவை காட்டிலும் ஒரு படி மேல். அதே சமயம் எத்தனை பேருக்கு காட்டப்படுகிறதோ அதனை பொறுத்து கட்டனம் எனும் போது இந்த நிறுவனங்களுக்கு வரும் விளம்பரங்கள் அதிகமாகிறது.

எல்லாவற்றிர்க்கும் மேல் நமது தரவுகளில் இருந்து உறிஞ்சப்படும் நுண் தகவல்கள் பல நிறுவனங்களுக்கு விற்கப்படுகிறது என்றே நினைக்கிறேன். இந்த தகவல்களை இன்றைய அளவில் பவ விதமாக உபயோகிக்க வாயப்புள்ளது. ஆனால் இந்த சேவைகள் எல்லாம் இலவசமாய் கிடைப்பதால் நாமும் நம் அனைத்து விதமான தரவுகளையும் கொன்டு சென்று அதற்குள் தள்ளுகிறோம். இன்று இப்படிப்பட்ட சேவைகள் இல்லாமல் நம் வாழ்வை கற்பனை செய்து பார்க்க இயலுமா? கூகுள் போன்ற தேடல் சேவைகள் மணித குலத்தின் சாதனைகளில் ஒரு மைல்கல் என்றே நான் கருதுகிறேன். ஆனால் இந்த சேவைகளுக்கு மறைமுகமாக கட்டனம் செலுத்தி கொன்டு தான் இருக்கிறோம். கூகுள் கணக்கு வைத்திருக்கும் ஒருவரை பற்றி யாருமே அனுக முடியாத அந்தரங்கங்களை கூட கூகுள் அறிந்திருக்கும். இப்படிப்பட்ட ஆழ்ந்த நுண் தகவல்கள் வணிக நிறுவனங்களுக்கு விற்கப்பட்டால், முதலாளிகள் இந்த தகவல்களின் மூலம் மணித குலத்தையே கட்டி வைத்தால்?

ஃபேஸ்புக் நமக்களிக்கும் ஒரு சிறிய அளவு அசட்டு கேளிக்கையை தவிர பல வழிகளில் அது நம் வாழ்வில் பாதிப்பயே ஏற்படுத்துகிறது. முக்கியமாக ஃபேஸ்புக் போன்ற இனைய தளங்கள் முதலாளித்துவத்தின் கருவிகளாக உபயோகிக்கப்படுவதே. பத்தொன்பது பில்லியன் டாலர், கிட்டதட்ட 140,000 கோடி கொடுத்து 'வாட்ஸெப்' என்ற ஒரு நிறுவனத்தை ஃபேஸ்புக் வாங்குகிறது என்றால் அது இதுவரை சம்பாதித்த லாபம் எவ்வளவிருக்கிம்? இவ்வளவு விலை கொடுத்து வாங்கிய நிறுவனத்தை வைத்து ஈட்ட நினைக்கும் லாபம் எவ்வளவிருக்கும்?

வணிகம் வளரட்டும், அதன் பொருட்டு தொழில்நுட்பமும் வளரட்டும். ஆனால் அவை எல்லாம் மணித குலத்திற்க்கும், நம்மை தாங்கி நிற்க்கும் இயற்கைக்கும் நன்மை செய்ய வேண்டுமே தவிர சுரன்டி கொள்ளையடிக்க கூடாது. ஆனால் உலகம் இன்று வளப்படுத்தும் பாதையில் இல்லை. இதை மாற்ற நாம் வெகு தூரம் பின்னால் செல்ல வேண்டும். உலகத்தின் கடிவாளம் முற்றிலுமே முதலாளிகளின் கைவசம் இருக்கிறது. அறத்திற்கு மதிப்பில்லை, பணத்திற்கே. ஃபேஸ்புக்கை தியாகம் செய்வதில் நாம் இழக்க போவது ஒன்றுமே இல்லை, மாறாக நன்மை தான்.

No comments:

Post a Comment