Tuesday, March 18, 2014

ஃபேஸ்புக் - அறியாத பக்கங்கள் - 1

இன்று இனையத்தை உபயோகிப்பவர்கள் அதிகம் நேரத்தை செலவிடும் ஒரு இனையதளம் ஃபேஸ்புக். உலக அளவில் அதிகாமாக உபயோகிக்கப்படும் இனைய தளங்கள் என்ற அலெக்ஸா (alexa) பட்டியளில் அது இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது, முதலிடம் கூகுல். ஏன் அது மக்களுக்கு உகந்ததாக இருக்கிறது? ஏனெனில் அது ஒருவருக்கு தன் அனைத்து நன்பர்களுடனும் இனைந்து இருக்க வழி வகுக்கிறது. இங்கு நன்பர் என்று கூட சொல்ல முடியாது, சிலமுறை மட்டுமே பேசியவர்கள், பேசியேயிராத ஆனால் ஒரே கல்லூரியிலோ, அலுவலகத்திலோ, குழுவிலோ இருந்தவர்கள் என்று எல்லோரயும் நம்முடன் தொடர்ப்பில் இருக்க செய்கிறது. நன்பர்களுடன் அரட்டை, நக்கல், நையான்டி, சினிமா, வீடியோ, தகவல்கள், சிறிது செய்திகள் என சகல பொழுதுபோக்கு அம்சங்களையும் ஃபேஸ்புக் உள்ளடக்கியிருக்குறது. எல்லாவற்றுக்கும் மேலாக இந்த 'சேவைகள்' எல்லாம் இலவசம் என்னும் போது யார் தான் உபயோகிக்க மாட்டார்கள்.  எனக்கு ஃபேஸ்புக் வாழ்வில் உதவியும் செய்திருக்கிறது, ஊறும் செய்திருக்கிறது. ஆனால் இங்கே நான் எழுத நினைப்பது நமக்கு தெரியாமல் ஃபேஸ்புக் நம் வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்பையே.

நேர விரயம்
இது பொதுவாக எல்லோரும் அறிந்த ஒன்றே. ஒரு சராசரி ஆனுக்கோ, பென்னுக்கோ அன்றாடம் கிடைக்கும் ஓய்வு நேரம் மிக குறைவு. விடுமுறை நாட்களை வீட்டு வேலை பார்க்கவும், ஓய்வு எடுக்கவும், வெளியே சுற்றவும் ஒதுக்கிவிட்டால், ஒவ்வொரு நாளும் நமக்கு மிச்சமாகும் நேரம் சில மணி நேரங்களே. இந்த சில மணி நேரங்களை நாம் எப்படி செலவிடுகிறாம்? சில வருடங்களுக்கு முன் இந்த நேரத்தை தொலைக்காட்சி அபகரிக்கும் இன்று அதை இனயமும் பங்கு போட்டு கொள்கிறது. இந்த பொன்னான சில மணி துளிகளையும் இவ்வாறு தான் செலவிட வேண்டுமா என்பது எல்லாருமே யோசிக்க வேன்டிய ஒரு கேள்வி. அப்படியே இதில் இருந்து மீள முயல்வரையும் இந்த தளங்கள் விடாமல் அடிமை ஆக்கிவிடுகிறது. நாம் நம் நேரத்தை விலை கொடுத்து அங்கே நாம் வாங்குவது ஊர் வம்பு செய்திகளும், வெட்டி அரட்டைகளும், பீத்தல்களும், குப்பை சினிமா சார்ந்த செய்திகளையும் தான். இதை விட ஆச்சரியம் என்னவெனில் இந்த ஃபேஸ்புக் போன்ற வலை தளங்கள் நம்மை அடிமையாக வைத்திருக்கவே பல யுக்திகளை கையாள்வது. உதாரனம் சமிபத்தில் ஃபேஸ்புக்கில் பார்த்த ஒரு வசதி, முன்பெல்லாம் ஒரு வீடியோவை க்ளிக் செய்தால் மட்டும் தான் அது ஓட ஆரம்பிக்கும், ஆனால் தற்போது திரையில் நம் முன் வரும் போதே ஓட ஆரம்பிக்கிறது. இது தானகவே ஓட ஆரம்பித்தாலும் கண் முன் அசையும் படம் தெரியும் போது அதை நின்று கவனிப்பதே மணித இயல்பாகும். இப்படியே அந்த பக்கங்கள் நம்மை இன்னும் சில மணித்துளிகள் அதிகமாக செலவிட வைக்கிறது. இப்படி ஃபேஸ்புக் போன்ற தளங்கள் நம்மை கட்டி போட்டு வைப்பதற்கு பல காரனங்கள் இருக்கிறது.


அறைகுறை ஆசாமிகள்
ஃபேஸ்புக்கில் நமக்கு ஏராளமான தகவல் தெரிய வருகின்றன. அறிவியல், உலக தகவல்கள், அரசியல் என்று அது பலவகை. ஆனால் இந்த தகவல்களை உருவாக்குபவர்கள் யார் என்று நாம் பார்க்க வேண்டும். அதை சொல்பவர் அந்த துறையில் நிபுனரா, இல்லை அந்த தகவலை கூறும் அளவிற்கு முறையான தகுதி உள்ளவரா என்று. அப்படி பார்த்தால், அங்கே முக்கால் வாசி தகவல்களை எழுதுவோர்கள் அரைகுறைகளே. இப்படி பட்ட தகவல்களில் இருந்து நாம் எதையுமே முழுதாக கற்றுக் கொள்ள போவதில்லை.

மேலும் படிக்க, எழுத்தாளர் ஜெயமோகனின் கட்டுரை

வலைதள பொருக்கிகள்
பேஸ்புக்கில் சரியான வகையில் அதன் ப்ரைவசி அமைப்புகளை அமைக்கவில்லை என்றாள், யார் வேண்டுமானாலும் நம்முடன் தொடர்பு கொள்ளளாம், நமது புகைபடங்களை பார்க்கலாம். அதில் கமென்ட்கள் எழுதலாம். இது பெரும்பாலும் பெண்களை பாதிக்கிறது. புகைப்படங்களை தவறாக உபயோகிக்க வாய்ப்புகள் அதிகம். ஆபாசமான கமென்ட்கள் எழுதக்கூடும்.

போலிகள்
ஃபேஸ்புக்கில் அகௌன்ட் பதிவு செய்ய அதிகபட்சம் ஒரு மின்னஞ்சல் முகவரியும், ஒரு தொலைபேசி எண்னும் இருந்தால் போதுமானது. அதை வைத்து கொன்டு யார் வேண்டுமானாலும் எந்த பெயரிலும், எந்த பாலினமுமாக எந்த ஊரிலும் இருப்பது போல் பொய்யான அகௌன்ட் பதிவு செய்ய முடியும். இப்படி அநாமதேயமாய் இருப்பவர்கள் மிகவும் வசதியாக பல தீய காரியங்களில் ஈடுபடலாம். தன் பெயர் கெட்டுவிடும் என்ற கவலையில்லாமல் கீழ்தரமான செயல்களையும், வசைகளையும் இடலாம். ஒரு பெண்னோ, ஆணோ மற்றோரு பெண் போல போலி பெயர் மற்றும் புகைபடங்களுடன் மற்றோரு ஆணிடம் இருந்து பல விதமான விஷயங்களை அல்லது பனத்தை பேசி பேசியே பெற்றுவிடலாம். இப்படி நூதன திருட்டுகள் நடக்க வாய்ப்புகள் பல உள்ளன. இன்னொரு நபரை போல் அகௌன்ட் பதிவு செய்து அந்த நபர் புகைப்படங்களை, கமென்ட்களை போடுவது போல் போட்டு அவரின் பெயரை கெடுக்கலாம். இதெல்லாம் ஏற்கனவே நடந்தேறிய கதைகளே. இவற்றை தடுக்க சட்டங்கள் உள்ளன, இந்த போலிகளை எளிதில் கண்டு பிடித்துவிட முடியும் தான். ஆனால் அதற்கு பாதிக்கபட்டவர் நடவடிக்கை எடுக்க முனைய வேண்டும். அப்படி பாதிக்கப்பட்ட அனைவரும் அந்த நடவடிக்கைகளை எடுக்கிறார்களா என்பது கேள்வி குறி தான்.  இதை போன்ற செயல்களால் தற்கொலையும் சில நடந்தேறி இருக்கிறது.

பொறாமை பெருவெளி
ஃபேஸ்புக் நம் கண் முன் இருக்கும் உலகத்தை தான்டி இன்னும் ஒரு சூட்சமமான உலகை (virtual world) நமக்கு அளிக்கிறது. அன்றாட உலகில் நாம் வழக்கமாக பார்க்கும் நன்பர்களை, நபர்களை தவிர தினந்தோறும் ஃபேஸ்புக் மூலம் நம்முடன் இனைந்திருக்கும் இந்த சூட்சும உலக நன்பர்களையும் நபர்களையும் கான நேர்கிறது. மனித இயல்புகளான  போட்டி, பொறாமை, சக மனித கட்டாயப்படுத்தல்கள் (peer pressure) போன்றவை நம் அன்றாட உலகதினரிடம் இருந்து தோன்றுவது மட்டுமில்லாமல் அந்த சூட்சும உலகத்தில் இருந்தும் தோன்றுகிறது. முன்பெல்லாம் ஒரு சில நன்பர்களுடனும், அன்டை வீட்டாருடனும் இந்த  சிக்கல்கள் என்றால் இன்று அதே சிக்கல்கள் சில நூறு நன்பர்கள் மூலமாகவும். இந்த ஃபேஸ்புக் நன்பர்கள் பெரும்பாலும் நம்முடன் படித்தவர்களோ, அல்லது சக வேலை பார்த்தவர்கள் என்கிற போது இந்த சிக்கல்களின் அழுத்தம் இன்னும் அதிகம்.

(தொடரும்)

No comments:

Post a Comment